திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த விஜயகுமார், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
திண்டுக்கல் மாவட்டம் தெப்பத்துப்பட்டி அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளியில் முதுகலை பட்டதாரி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறேன். பொது இடமாறுதல் கலந்தாய்வுக்காக காத்திருக்கிறேன். இதற்காக அறிவிப்பு வெளியானது. பொது இடமாறுதல் கலந்தாய்வு தொடர்பான வழிகாட்டுதல்கள் கடந்த ஆண்டு வெளியிடப்பட்டது.
அதன்படி கள்ளர் சீரமைப்பு பள்ளியில் 3 ஆண்டுகள் பணிபுரிந்திருக்க வேண்டும்.
ஆனால் இதற்கு மாறாக ஒரு பள்ளியில் 6 மாதம் பணிபுரிந்தவர் பணிமூப்பு பட்டியலில் எனக்கு முன்பாக சேர்க்கப்பட்டு உள்ளார். இது சட்டவிரோதம். எனவே முதுகலை பட்டதாரி ஆசிரியர் பொது இடமாறுதல் கலந்தாய்வுக்கும், பணி மூப்பு பட்டியலுக்கும் தடை விதிக்க வேண்டும். முறையான பணி மூப்பு பட்டியலை தயாரித்து கலந்தாய்வு நடத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி விக்டோரியா கவுரி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணி மூப்பு பட்டியலுக்கு ஆட்சேபனை தெரிவிக்க போதுமான கால அவகாசம் வழங்கவில்லை. எனவே அந்த பட்டியலுக்கு தடை விதிக்கப்படுகிறது என நீதிபதி உத்தரவிட்டு, விசாரணையை 4 வாரத்துக்கு ஒத்திவைத்தார்.
No comments:
Post a Comment