தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் செயல்படும் பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் பதவி காலம் நீட்டிப்பு! - துளிர்கல்வி

Latest

Search This Site

Saturday, March 2, 2024

தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் செயல்படும் பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் பதவி காலம் நீட்டிப்பு!

தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் செயல்படும் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களின் பதவி காலம் 2024-ம் ஆண்டில் முறையே ஏப்ரல், மே, ஜூலை மாதங்களில் நிறைவடைய உள்ளது. 


இந்த பதவிக் காலத்தை வருகிற ஆகஸ்டு மாதம் வரை நீட்டித்து ஆணை பிறப்பிக்குமாறு, தமிழ்நாடு மாதிரிப் பள்ளிகள் உறுப்பினர் செயலர் அரசிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார். அதனை ஏற்று, கடந்த 2022-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23-ந்தேதி கட்டமைக்கப்பட்ட பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கு ஜூலை மாதம் 20-ந்தேதி வரையிலும், அதே ஆண்டு ஏப்ரல் மாதம் 30-ந்தேதி கட்டமைக்கப்பட்டவர்களுக்கு ஜூலை 27-ந்தேதி வரையிலும், 2022-ம் ஆண்டு மே மாதம் கட்டமைக்கப்பட்ட பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்களுக்கு ஆகஸ்டு மாதம் 10-ந்தேதி வரையிலும், அதே ஆண்டு ஜூலை மாதம் கட்டமைக்கப்பட்ட உறுப்பினர்களுக்கு ஆகஸ்டு 17-ந்தேதி வரையிலும் பதவி காலம் நீட்டித்து பள்ளிக்கல்வித் துறை அரசாணை வெளியிட்டுள்ளது. 

அதேபோல், 2024-2026-ம் ஆண்டுகளுக்கான பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்புக்கான புதிய உறுப்பினர்களை வருகிற ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதத்துக்குள் நியமிக்க வேண்டும். இந்த மறுகட்டமைப்பு நடைமுறைகளை மேற்கொள்ள தமிழ்நாடு மாதிரி பள்ளிகள் உறுப்பினர் செயலாளர் நடவடிக்கை எடுக்கவும் கல்வித்துறை அறிவுறுத்தி இருக்கிறது.

No comments:

Post a Comment