இளங்கலை, முதுகலை, பி.எச்டி பயிலும் மாணவர்களுக்கு விண்வெளித்துறையில் இஸ்ரோ பயிற்சி விண்ணப்பிக்க அழைப்பு - துளிர்கல்வி

Latest

Search This Site

Wednesday, March 20, 2024

இளங்கலை, முதுகலை, பி.எச்டி பயிலும் மாணவர்களுக்கு விண்வெளித்துறையில் இஸ்ரோ பயிற்சி விண்ணப்பிக்க அழைப்பு

இளங்கலை, முதுகலை, பி.எச்டி பயிலும் மாணவர்களுக்கு இஸ்ரோ விண்வெளித்துறை குறித்து பயிற்சி அளிக்க உள்ளது. இதற்கு மாணவர்கள் விண்ணப்பிக்க இஸ்ரோ அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

மாணவர்களுக்கு இஸ்ரோ பயிற்சி 

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் திறமைகளை ஊக்குவிக்கும் நோக்கில், ‘இன்டர்ன்ஷிப் திட்டம்' என்ற மாணவர் பயிற்சித் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. நாடு முழுவதிலுமிருந்து விண்வெளித் துறையில் தங்கள் ஆர்வங்களைத் தொடர விரும்பும் மற்றும் நடைமுறை அனுபவத்தை மாணவர்கள் பெறமுடியும். இந்த திட்டத்தின் கீழ், இந்தியாவிலும், வெளிநாட்டிலும், அறிவியல், தொழில்நுட்பத்தில் துறைகளில், அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் இருந்து இளங்கலை, முதுகலை மற்றும் பி.எச்டி. பயிலும் மாணவர்கள் தகுதியுடையவர்கள். பயிற்சி காலம் அதிகபட்சம் 45 நாட்கள் வரை நீடிக்கும். இது மாணவர்களுக்கு அதிநவீன விண்வெளி ஆராய்ச்சியில் அனுபவத்தைப் பெற ஒரு தனித்துவமான வாய்ப்பை வழங்குகிறது. 

ஆராய்ச்சியாளர்கள் விண்ணப்பம் 

 மாணவர்கள் குறைந்தபட்சம் 60 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். அல்லது 10-க்கு 6.32 சிஜிபிஏ பெற்றிருக்க வேண்டும். இந்தத் திட்டத்திற்கு மிகவும் உறுதியான மற்றும் கல்வியில் வெற்றி பெற்ற மாணவர்கள் மட்டுமே தேர்வு செய்யப்படுவார்கள். கல்லூரியில் 6-வது செமஸ்டர் முடித்த என்ஜினீயரிங் மாணவர்கள், 1-வது செமஸ்டருக்குப் பிறகு எம்.இ., எம்.டெக் மாணவர்கள், இறுதியாண்டு பி.எஸ்சி.. டிப்ளமோ மாணவர்கள் மற்றும் 1-வது செமஸ்டருக்குப் பிறகு எம்.எஸ்.சி. மாணவர்கள் இந்தத் திட்டத்திற்குத் தகுதியுடையவர்கள். படிப்பை முடித்த பி.எச்டி ஆராய்ச்சியாளர்களும் விண்ணப்பிக்க முடியும். 

இஸ்ரோவின் முயற்சிகள் 

திட்டத்தின் காலம், படிப்பைப் பொறுத்து, குறைந்தபட்சம் 45 நாட்கள் முதல் விரிவான 30 மாதங்கள் வரை இருக்கும். தேர்வு செயல்முறையும் துல்லியமாக இருக்கும். நிறுவப்பட்ட விதிமுறைகளின்படி விண்ணப்பங்கள் அந்தந்த மையங்களால் ஆராயப்படும். பயிற்சியாளர்கள் மற்றும் திட்டப் பயிற்சியாளர்களுக்கு எந்தவிதமான ஊக்கத்தொகை அல்லது நிதி உதவி வழங்கப்படாது. கூடுதலாக, பயிற்சியை வெற்றிகரமாக முடித்தவுடன், இஸ்ரோவின் முயற்சிகளுக்கு அவர்களின் பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக சான்றிதழும் வழங்கப்படும். மாணவர்கள் தங்குமிட வசதிகள் வழங்கப்படாவிட்டாலும், கிடைக்கும் தன்மைக்கு உட்பட்டு கட்டண அடிப்படையில் ஏற்பாடுகள் செய்யப்படலாம். கூடுதல் தகவல்களுக்கு https://www.ursc.gov.in/hrd/students.jsp என்ற இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.

No comments:

Post a Comment