சி.ஏ. தேர்வு தேதிகள் மாற்றம்! - துளிர்கல்வி

Latest

Search This Site

Thursday, March 21, 2024

சி.ஏ. தேர்வு தேதிகள் மாற்றம்!

இந்தியாவில் ‘ஆடிட்டர்’ எனப்படும் பட்டய கணக்காளராக (சி.ஏ) விரும்புபவர்கள், இந்திய பட்டய கணக்காளர்கள் நிறுவனம் (ஐ.சி.ஏ.ஐ) நடத்தும் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற வேண்டியது கட்டாயம் ஆகும். 


இந்த தகுதித் தேர்வு முதல்நிலைத் தேர்வு, இடைநிலைத் தேர்வு, இறுதித் தேர்வு என 3 கட்டங்களாக நடைபெறும். அந்த வகையில் 2024-ம் ஆண்டுக்கான இடைநிலை மற்றும் இறுதித் தேர்வுகள் வருகிற மே மாதம் நடைபெறும் என கூறி அதற்கான தேதிகளை ஐ.சி.ஏ.ஐ. ஏற்கனவே அறிவித்திருந்தது. 

இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தல் தேதிகளை இந்திய தேர்தல் கமிஷன் அண்மையில் அறிவித்த நிலையில், அதனை கருத்தில் கொண்டு சி.ஏ. தேர்வுகளுக்கான தேதிகளை ஐ.சி.ஏ.ஐ மாற்றியமைத்துள்ளது. திருத்தப்பட்ட அட்டவணையின்படி, குரூப் 1-க்கான இடைநிலைப் பாடத் தேர்வு மே 3, 5 மற்றும் 9 ஆகிய தேதிகளிலும், குரூப் 2-க்கான இடைநிலை பாடத்தேர்வு மே 11, 15, 17 ஆகிய தேதிகளிலும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

 அதேபோல் குரூப் 1-க்கான இறுதித் தேர்வு மே 2, 4 மற்றும் 8 ஆகிய தேதிகளிலும், குரூப் 2-க்கான இறுதித் தேர்வு மே 8, 10 மற்றும் 12 ஆகிய தேதிகளிலும் நடைபெறும் என ஐ.சி.ஏ.ஐ. அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment