அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் தமிழ்நாடு உள்
படபல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 50 ஆயிரம் அரசுப்பள்ளி மாண
வர்களுக்கு தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளில் தொழில் வழி
காட்டுதல் பயிற்சிகளை அளிக்க சென்னை ஐஐடி திட்டமிட்டுள்ளது.
'ஸ்டெம்' எனப்படும் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல்,
கணிதம் சார்ந்த துறைகளுடன் தொடர்புடைய பணிகளில் மாணவர்
களை ஈடுபட ஊக்குவிக்கும் நோக்கில் சென்னை ஐஐடி சார்பில் வழி
காட்டுதல் பயிற்சிகள் கட்டணமின்றி வழங்கப்படுகின்றன.
அந்த வகையில், தமிழகம், ஆந்திரம், தெலங்கானா, கர்நாடகம், உத்
தரப் பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் உள்ள அரசுப்
பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் வழங்க திட்டமிடப்பட்
டுள்ளது. இத்திட்டத்தில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள்
என்றஇணைப்பை
பயன்படுத்தி பதிவு செய்துகொள்ளலாம்.
இது குறித்து சென்னை ஐஐடி உயிரித் தொழில்நுட்பத் துறை பேரா
சிரியர் வி.சீனிவாஸ் கூறியதாவது: சற்று கடினமான அறிவியல் கருத்து
கள் அனைவரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் 'பாப்பு
லர் சயின்ஸ்' எனும் திட்டத்தை தொடங்கியுள்ளோம்.
அதன் கீழ், 9,193 அரசுப் பள்ளிகளுக்கு அறிவியல் தொடர்பான
3,20,702 புத்தகங்களை வழங்கியுள்ளோம். அவை ஆங்கிலம் மட்டுமல்
லாது தமிழ், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், வங்காளம்,
மராத்தி ஆகிய ஏழு இந்திய மொழிகளிலும் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், அத்திட்டத்தின் வாயிலாக மாணவர்கள் விரும்பும் துறை
களில் தொழில் வழிகாட்டுதல் அமர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
2026-ஆம் ஆண்டுக்குள் தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில்
50 ஆயிரம் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பிராந்திய மொழிகளில்
தொழில் வழிகாட்டுதல் பயிற்சி அளிக்க இலக்கு நிர்ணயித்துள்ளோம்
என்றார் அவர்.
No comments:
Post a Comment