கை தட்டினால்... இவ்வளவு நன்மைகளா..? - துளிர்கல்வி

Latest

Search This Site

Saturday, March 23, 2024

கை தட்டினால்... இவ்வளவு நன்மைகளா..?

பார்வையாளர்கள் ரசிக்கும் வகையில் மேடைகளில் பேசுபவர்களுக்கு பலத்த கை தட்டல்கள் பாராட்டாக கிடைக்கும். அப்படி கை தட்டுவது கூட ஏராளமான நன்மைகளை வழங்கக்கூடியது. இதற்காக மருத்துவ உலகில் ‘கிளாப்பிங் தெரபி’ என்னும் சிகிச்சை முறையே இருக்கிறது. தினமும் கை தட்டுவதற்கு சில நிமிடங்களை ஒதுக்குமாறு அந்த சிகிச்சை பரிந்துரைக்கிறது. சரி, கை தட்டுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது என்பதை தெரிந்து கொள்வோமா..? 
இரண்டு உள்ளங்கைகளிலும், 30-க்கும் மேற்பட்ட அக்குபிரசர் புள்ளிகள் உள்ளன. கை தட்டும்போது அவைகள் தூண்டப்பட்டு ஏராளமான நன்மைகளை அளிக்கின்றன. 

மன அழுத்தம், பதற்றத்தை கட்டுப்படுத்தி மன ஆரோக்கியத்துக்கும் நலம் பயக்கும். 

 மகிழ்ச்சிக்கான சமிக்ஜைகள் பரவி, மனச்சோர்வை தடுக்க உதவும். 
குழுவாக சேர்ந்து கை தட்டும் வழக்கத்தை பின்பற்றுபவர்களிடத்தில் மகிழ்ச்சி அளிக்கும் ஹார்மோனின் அளவு அதிகரித்திருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. 

ரத்த அழுத்த அளவை ஒழுங்கு படுத்த உதவும். உடல் முழுவதும் ரத்த ஓட்டம் மேம்படுவதற்கும், இதய நோய் அபாயத்தை குறைப்பதற்கும் வித்திடும். 

வெள்ளை அணுக்களின் உற்பத்தியும் அதிகரிக்கும். நோய் எதிர்ப்பு சக்தியும் மேம்படும். 

குழந்தைகள் கை தட்டுதல் பயிற்சியை தொடர்ந்து பின்பற்றும்போது அறிவாற்றல் திறன் மேம்படும். ஞாபக சக்தியும் கூடும். கவனச்சிதறலும் கட்டுப்படும். 
உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, தூக்கமின்மை, தலைவலி, ஜலதோஷம், கண் சார்ந்த பிரச்சினைகள் போன்றவற்றின் வீரியத்தை குறைப்பதற்கும் உதவும். 

 உள்ளங்கைகளில் சிறிதளவு கடுகு எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் தேய்த்தும் கை தட்டலாம். காலைவேளையில் இந்த வழக்கத்தை தொடர்வது நல்ல பலனை கொடுக்கும்.

No comments:

Post a Comment