தமிழ் நாட்டிலுள்ள அனைத்து அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை
மற்றும் மேல் நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கல்வித் தரத்தை
உயர்த்தும் பொருட்டு சிறப்பு முயற்சிகளாக இல்லம் தேடிக் கல்வி. எண்ணும்
எழுத்தும், மற்றும் நான் முதல்வன் திட்டங்களுடன் பிற முன்னெடுப்புகளான
தற்காப்புக்கலை பயிற்சி, கல்விச் சுற்றுலா, கல்வி சாரா இணை செயல்பாடுகளான
இலக்கிய மன்றம், வினாடி வினா போட்டிகள், கலைத் திருவிழா மற்றும்
விளையாட்டுப் போட்டிகள் போன்றவை தமிழ்நாடு அரசுப் பள்ளிக் கல்வித்
மாணவர்களை அரசுப்
துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
பள்ளிகளை நோக்கி ஈர்க்கும் வண்ணம் செயல்பட வேண்டியது பெற்றோர்.
ஆசிரியர் மற்றும் பள்ளிக் கல்வி நிர்வாகம் என்ற முக்கூட்டின் தலையாய
கடமையாகும். அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள்,
உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல் நிலைப் பள்ளிகளில் 2024-2025 ஆம்
கல்வியாண்டில் 5 வயது பூர்த்தியடைந்த மற்றும் பள்ளி வயது குழந்தைகள்
அனைவரையும் அரசுப் பள்ளிகளில் சேர்ப்பதற்கு ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 1
முதல் பின்வரும் நடைமுறைகளை பின்பற்றிட பள்ளிக் கல்வி இயக்குநர் மற்றும்
தொடக்கக் கல்வி இயக்குநர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கலாம் என முடிவு
செய்து அரசு அவ்வாறே ஆணையிடுகிறது
அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை பணிகள் நடைபெறுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் - அரசாணை வெளியீடு
No comments:
Post a Comment