SMC மறுகட்டமைப்பு நடைமுறையின்போது முன்னாள் மாணவர்களை இணைத்தல்- வழிகாட்டுதல்கள் வழங்குதல் சார்ந்து மாநிலத் திட்ட இயக்குநரின் கடிதம்!
குழந்தைகளுக்கான இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்,2009இன்படி பள்ளி
முன்னேற்றத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் பள்ளி மேலாண்மைக் குழு உருவாக்கப்பட்டுள்ளது.
குழந்தைகளின் அடிப்படை உரிமைகளான கல்வி. பாதுகாப்பு, வளர்ச்சி போன்றவற்றிற்கும்,
பள்ளியின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் துணைநிற்க ஏதுவாக பார்வை-1ன்படி பள்ளி
மேலாண்மைக் குழுவில் அரசுப் பள்ளிகளில் பயின்ற முன்னாள் மாணவர்களை உறுப்பினர்களாக
இணைத்து செயல்படும் வகையில் தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை மேற்காண் ஆணையினை
வெளியிட்டுள்ளது. பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு நடைமுறையின்போது பள்ளி
மேலாண்மைக் குழுவில் முன்னாள் மாணவர்களை இணைத்தல் குறித்த தக்க வழிகாட்டுதல்கள்
கீழ்க்கண்டவாறு வழங்கப்படுகிறது.
முன்னாள் மாணவர்களை தேர்ந்தெடுப்பதற்கான வழிகாட்டுதல்கள்:
பள்ளி மேலாண்மைக் குழு மறுக்கடமைப்பு நிகழ்வின் போது பார்வை-2ன்படி ஏற்கனவே
இருக்கும் 20 உறுப்பினர்களில் ஒரு முன்னாள் மாணவருக்கான முன்னுரிமையும் புதிதாக 4
முன்னாள் மாணவர்களும் உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். இதில் நான்கில்
இருவர் பெண் உறுப்பினார்களாக இருக்க வேண்டும்.
No comments:
Post a Comment