நவோதயா பள்ளிகளில் காலியாக உள்ள 1353 ஆசிரியரல்லாத பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு | Plenty of Vacancies in Navodaya Vidyalaya Schools! - துளிர்கல்வி

Latest

Search This Site

Friday, April 12, 2024

நவோதயா பள்ளிகளில் காலியாக உள்ள 1353 ஆசிரியரல்லாத பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு | Plenty of Vacancies in Navodaya Vidyalaya Schools!

நாடு முழுவதும் உள்ள நவோதயா பள்ளிகளில் காலியாக உள்ள 1353 ஆசிரியரல்லாத பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

 நாடு முழுவதும் உள்ள நவோதயா பள்ளிகளில் காலியாக உள்ள 1353 ஆசிரியரல்லாத பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 30 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 


பணி: Female Staff Nurse (Group B) காலியிடங்கள்: 121 சம்பளம்: மாதம் ரூ.44,900 - 1,42,400 வயதுவரம்பு: 35-க்குள் இருக்க வேண்டும். தகுதி: பி.எஸ்சி நர்சிங் முடித்து இரண்டரை ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

பணி: Assistant Section Officer (Group B) காலியிடங்கள்: 5 வயதுவரம்பு: 23 - 33-க்குள் இருக்க வேண்டும். சம்பளம்: மாதம் ரூ.35,400 - 1,12,400 தகுதி: இளங்கலை பட்டம் பெற்றிருப்பதுடன் 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

 பணி: Audit Assistant (Group 8) காலியிடங்கள்: 12 வயதுவரம்பு: 18 - 30-க்குள் இருக்க வேண்டும். சம்பளம்: மாதம் ரூ.35,400 - 1,12,400 தகுதி:பி.காம் முடித்து 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். பணி: Junior Translation Officer (Group B) காலியிடங்கள்: 4 வயதுவரம்பு: 33-க்குள் இருக்க வேண்டும். சம்பளம்: மாதம் ரூ.35,400 - 1,12,400 தகுதி:ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

 பணி: Legal Assistant (Group B) காலியிடங்கள்: 1 வயதுவரம்பு:23 - 35-க்குள் இருக்க வேண்டும். சம்பளம்: மாதம் ரூ.35,400 - 1,12,400 தகுதி:சட்டத்துறையில் பட்டம் பெற்று அரசுத் துறை, தன்னாட்சி அமைப்புகள் மற்றும் பொதுத்துறை நிறுவனம் சார்ந்த சட்ட வழக்குகளைக் கையாள்வதில் மூன்று ஆண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

 பணி: Stenographer (Group C) காலியிடங்கள்: 23 சம்பளம்: மாதம் ரூ.25,500 - 81,100 வயதுவரம்பு: 18 - 27-க்குள் இருக்க வேண்டும். தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 80 வார்த்தைகள் சுருக்கெழுத்து எழுதும் திறன் மற்றும் நிமிடத்திற்கு 50 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறனும் பெற்றிருக்க வேண்டும். 

 பணி: Computer Operator (Group C) காலியிடங்கள்: 2 சம்பளம்: மாதம் ரூ.25,500 - 81,100 வயதுவரம்பு: 18 - 27-க்குள் இருக்க வேண்டும். தகுதி: பிசிஏ, கணினி அறிவியல், ஐடி பிரிவில் பி.எஸ்சி முடித்திருக்க வேண்டும் அல்லது பிஇ, பி.டெக் முடித்திருக்க வேண்டும். பணி: Catering Supervisor (Group C) காலியிடங்கள்: 78 சம்பளம்: மாதம் ரூ.25,500 - 81,100 வயதுவரம்பு: 35-க்குள் இருக்க வேண்டும். தகுதி: மத்திய சுற்றுலாத் துறையில் அங்கீகாரம் பெற்ற கல்லூரியில் பி.எஸ்சி கேட்டரிங், டெக்னாலஜி முடித்திருக்க வேண்டும். 

 பணி: Junior Secretariat Assistant (Group C)(Hqrs/RO Cadre) காலியிடங்கள்: 21 பணி: Junior Secretariat Assistant {Group C)(JNV Cadre) காலியிடங்கள்: 360 சம்பளம்: மாதம் ரூ.19,900 - 63,200 வயதுவரம்பு: 27-க்குள் இருக்க வேண்டும். தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறனும், கணினியில் பணிபுரியும் திறனும் பெற்றிருக்க வேண்டும். 

 பணி: Electrician cum Plumber (Group C) காலியிடங்கள்: 128 சம்பளம்: மாதம் ரூ.19,900 - 63,200 வயதுவரம்பு: 40-க்குள் இருக்க வேண்டும். தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் எல்க்ட்ரீசியன் அல்லது ஒயர்மேன் பிரிவில் ஐடிஐ முடித்து எலக்ட்ரீசியன் மற்றும் பிளம்பிங் பணியில் 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

பணி: Lab Attendant (Group C) காலியிடங்கள்: 161 சம்பளம்: மாதம் ரூ.மாதம் ரூ.18,000 - 56,900 தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் டிஎம்எல்டி முடித்திருக்க வேண்டும் அல்லது அறிவியல் பாடப்பிரிவில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயதுவரம்பு: 30-க்குள் இருக்க வேண்டும். 

பணி: Mess Helper (Group C) காலியிடங்கள்: 442 சம்பளம்: மாதம் ரூ.18,000 - 56,900 தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். வயதுவரம்பு: 30-க்குள் இருக்க வேண்டும். 

 பணி: Multi Tasking Staff (Group C)[Hqrs/RO Cadre] காலியிடங்கள்: 19 சம்பளம்: மாதம் ரூ.18,000 - 56,900 தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். வயதுவரம்பு: 30-க்குள் இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் வழி எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வுகளில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் இந்த தேர்வு நடைபெறும். விண்ணப்பக் கட்டணம்: Staff Nurse பணிக்கு ரூ.1500. இதர பணிகளுக்கு ரூ.1000. எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு ரூ.500. கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். விண்ணப்பிக்கும் முறை: www.navodaya.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 30.4.2024 மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்

No comments:

Post a Comment