சென்னை பல்கலைக்கழக முதுகலை பட்டப்படிப்பு வருகிற 15-ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம் - துளிர்கல்வி

Latest

Search This Site

Saturday, April 13, 2024

சென்னை பல்கலைக்கழக முதுகலை பட்டப்படிப்பு வருகிற 15-ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம்

சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ், 100-க்கும் அதிகமான அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் கலை, அறிவியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. 


அதேபோல், பல்கலைக்கழக வளாகத்தில் பல்வேறு துறை பட்டப்படிப்புகள், முதுகலை பட்டப்படிப்புகள், சான்றிதழ் படிப்புகள் கற்பிக்கப்படுகின்றன. இந்த நிலையில், சென்னை பல்கலைக்கழகத்தின் பல்வேறு துறைகளில் 2024-25-ம் கல்வியாண்டுக்கான முதுகலை படிப்புகளுக்கு வருகிற 15-ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று சென்னை பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து சென்னை பல்கலைக்கழகம் நேற்று வெளியிட்ட அறிவிப்பில், “சென்னை பல்கலைக்கழகத்தின் பல்வேறு துறைகளில் 2024-25-ம் கல்வியாண்டு முதுகலை பட்டப்படிப்பு, முதுகலை பட்டய படிப்பு மற்றும் சான்றிதழ் படிப்புகளில் சேருவதற்கு www.unom.ac.inஎன்ற இணையதளத்தில் வருகிற 15-ந்தேதி முதல் இளங்கலை பட்டப்படிப்பு நிறைவு செய்த மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment