நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும்
19-ந் தேதி பொது விடுமுறை நாள்
தமிழக அரசு அறிவிப்பு
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள 19-ந் தேதியை பொது விடுமுறை நாளாக அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தமிழகத்தில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தலும், விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தலும் வரும் 19-ந் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெறும் என்று இந்திய தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.
அதற்கான அறிவிப்பாணையை தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ளதால், அந்த தேதியை பொது விடுமுறை நாளாக சட்டப்படி அறிவிக்க வேண்டும். அதன்படி, வரும் 19-ந் தேதியை பொதுவிடுமுறை நாளாக அறிவித்து கவர்னர் உத்தரவிட்டு உள்ளார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment