இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் தனியார் பள்ளிகளில் 25 சதவீத ஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கை 22-ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம் - துளிர்கல்வி

Latest

Search This Site

Wednesday, April 3, 2024

இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் தனியார் பள்ளிகளில் 25 சதவீத ஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கை 22-ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம்

இலவச மற்றும் கட்டாயக்கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் எல்.கே.ஜி முதல் 9-ம் வகுப்பு வரை 25 சதவீதம் ஒதுக்கீட்டில் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. 


அதன்படி, ஒவ்வொரு ஆண்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு, அதன் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. அந்தவகையில் 2024-25-ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை தொடர்பான விவரங்கள் வெளியாகியுள்ளது. தனியார் பள்ளிகளில் 25 சதவீத ஒதுக்கீட்டில் காலி இடங்கள் குறித்த விவரங்களை அந்தந்த பள்ளிகள் அறிவிப்பு பலகையில் வருகிற 10-ந்தேதி தெரிவிக்க வேண்டும். 

மேலும் இதுதொடர்பான விவரங்கள் www.tnemis.tnschools.gov.in என்ற இணையதளத்திலும் தெரிந்து கொள்ளலாம். இந்த இடங்களுக்கு வருகிற 22-ந்தேதி முதல் அடுத்த மாதம் (மே) 20-ந்தேதி வரை www.rte.tnschools.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. மேலும் இந்த இடங்களுக்கான மாணவர் சேர்க்கையை அடுத்த மாதம் 29-ந்தேதிக்குள் முடிக்கவும் பள்ளிகளுக்கு, கல்வித் துறை உத்தரவிட்டு இருக்கிறது. ஒவ்வொரு பள்ளியிலும் உள்ள 25 சதவீத ஒதுக்கீட்டுக்கு மேல் விண்ணப்பங்கள் வந்திருந்தால், அந்த இடங்களுக்கு குலுக்கல் முறையில் இடங்கள் ஒதுக்கப்படும்.

No comments:

Post a Comment