வாக்குச்சாவடி உதவி மையத்தில் அகர வரிசைப்படியான வாக்காளர் பட்டியல் வைக்கப்படுவதால், வாக்காளர்கள் தங்கள் பெயரை சிரமமின்றி கண்டுபிடிக்க முடியும் என்று தமிழக தலைமைதேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தெரிவித்தார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது:
தமிழகத்தில் மக்களவை தேர்தலில் பணியாற்றும் தேர்தல் பணியாளர்களுக்கான முதல்கட்ட பயிற்சி மார்ச் 24-ம் தேதி அளிக்கப்பட்டது. 2-ம் கட்ட பயிற்சி கடந்த 7-ம் தேதி வழங்கப்பட்டது. அடுத்தகட்ட பயிற்சி ஏப்.18-ம் தேதி வழங்கப்படும். இதற்கிடையில் தேவைப்படும் பகுதிகளில் கூடுதல்பயிற்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், தேர்தல் பணியாளர்களுக்கு தாங்கள் வசிக்கும் சட்டப்பேரவை தொகுதிக்குள் பணி வழங்கப்பட்டால், இடிசி எனப்படும் பணியாற்றும் வாக்குச்சாவடியிலேயே மின்னணு வாக்குப்பதிவு செய்யும் வசதி வழங்கப்படுகிறது.
வேறு தொகுதி என்றால் தபால் வாக்கு வசதி வழங்கப்பட்டுள்ளது.வாக்காளர் தகவல் சீட்டை (‘பூத் சிலிப்’) பொருத்தவரை, காலை 11 மணிநிலவரப்படி, 6.23 கோடி வாக்காளர்களில் 33.46 சதவீதம் அதாவது, 2 கோடி 8 லட்சத்து 59,559 பேருக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளது. ஏப்.13-ம் தேதிக்குள் அனைவருக்கும் விநியோகம் செய்யப்பட்டுவிடும்
No comments:
Post a Comment