தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை மாவட்ட கல்வி அலுவலர் பதவி: முதன்மைத் தேர்வு முடிவு - துளிர்கல்வி

Latest

Search This Site

Tuesday, April 23, 2024

தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை மாவட்ட கல்வி அலுவலர் பதவி: முதன்மைத் தேர்வு முடிவு

தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை பணியில் மாவட்ட கல்வி அலுவலர் (குரூப்-1சி) பதவிகளில் காலியாக இருந்த 11 இடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) வெளியிட்டது. 
இதற்கான முதல்நிலைத் தேர்வு கணினி வாயிலாக கடந்த ஆண்டு (2023) ஏப்ரல் மாதம் 4-ந்தேதி நடத்தப்பட்டது. பின்னர் முதன்மை எழுத்து தேர்வுக்கான 113 பேர் கொண்ட பட்டியல் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் வெளியானது. இதனையடுத்து முதன்மைத் தேர்வு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடத்தப்பட்டது. தேர்வு முடிந்து 5 மாதங்கள் கடந்த நிலையில் முதன்மைத் தேர்வு முடிவை நேற்று டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டுள்ளது. இதில் வெற்றி பெற்றவர்கள் அடுத்தகட்டமாக நேர்முகத் தேர்வை எதிர்கொள்ள வேண்டும். 

அந்தவகையில் நேர்முகத் தேர்வுக்கு தற்காலிகமாக 33 பேர் அனுமதிக்கப்பட்டு, அவர்களின் பட்டியலை http://www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் தேர்வர்கள் சென்று தெரிந்து கொள்ளலாம். இதேபோல், குரூப்-7ஏ பணியில் அடங்கிய செயல் அலுவலர் நிலை-1 பதவிகளில் உள்ள 9 இடங்களுக்கு நடத்தப்பட்ட தேர்வு முடிவும், தமிழ்நாடு கருவூலங்கள் மற்றும் கணக்குப் பணிகள் மற்றும் வாரியங்கள், நிறுவனங்களில் அடங்கிய ஒருங்கிணைந்த கணக்கு பணிகள் பதவிகளில் இருந்த 52 பணியிடங்களுக்கும் நடந்த தேர்வு முடிவும் டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் நேற்று வெளியாகியுள்ளது.

No comments:

Post a Comment