பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு என்று அழைக்கப்படும் 'கியூட்' மற்றும் பல்கலைக்கழக மானியக்குழு தேசிய தகுதித் தேர்வு என்று கூறப்படும் யு.ஜி.சி. நெட் ஆகிய தேர்வுகள் வெவ்வேறு பாடங்களுக்கு வெவ்வேறு நாட்களில் தேர்வுகளை தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ.) நடத்தும். அவ்வாறு நடத்தப்படும் போது ஒரு தேர்வரின் மதிப்பெண் மற்றொரு தேர்வரின் மதிப்பெண்ணுடன் ஒப்பிடும் வகையில் திருத்துவதற்காக மதிப்பெண்களை சமன்படுத்தும் (நார்மலிசேசன்) முறை பின்பற்றப்படுகிறது.
இதற்கு தேர்வர்கள் தரப்பில் எதிர்ப்பு கிளம்பியது.
இந்த நிலையில் கியூட், நெட் தேர்வுகளுக்கான மதிப்பெண்களை சமப்படுத்தும் முறை இந்த ஆண்டு நீக்கம் செய்யப்படுவதாக பல்கலைக்கழக மானியக்குழு தலைவர் ஜெகதீஷ்குமார் தெரிவித்தார்.
இதுதொடர்பாக ஜெகதீஷ்குமார் கூறுகையில், ‘பொதுவாக கியூட், நெட் தேர்வுகள் பல்வேறு பாடங்களுக்கு வெவ்வேறு நாட்களில் நடத்தும்போது இந்த சமன்படுத்தும் முறை அறிவியல் வழிமுறையில் பின்பற்றுகிறோம். ஆனால் இந்த ஆண்டு அந்தந்த பாடங்களுக்கு இந்த 2 தேர்வுகளும் ஒரே ஷிப்டில் நடத்தப்பட உள்ளன.
அதனால் மதிப்பெண்களை சமன்படுத்தும் முறை தேவையில்லை' என்றார்.
அதன்படி, கியூட் நுழைவுத் தேர்வு வருகிற மே மாதம் 15-ந்தேதி முதல் 24-ந்தேதி வரையிலும், யு.ஜி.சி. நெட் தேர்வு ஜூன் மாதம் 16-ந்தேதியும் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment