எம்.ஜி.ஆர். கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் பட்டய பயிற்சிக்கு மாணவர் சேர்க்கை - துளிர்கல்வி

Latest

Search This Site

Wednesday, April 24, 2024

எம்.ஜி.ஆர். கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் பட்டய பயிற்சிக்கு மாணவர் சேர்க்கை

எம்.ஜி.ஆர். கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் பட்டய பயிற்சிக்கு மாணவர் சேர்க்கை அதிகாரி தகவல் 
கடலூர் டாக்டர் எம்.ஜி.ஆர். கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2024-25-ம் கல்வி ஆண்டில் முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப்பயிற்சி தொடங்கப்பட உள்ளது. இந்த பயிற்சியில் மாணவர்கள் சேர்வதற்கு www.tncuiem.comஎன்ற இணையதள முகவரியில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். பயிற்சி செப்டம்பர் மாதம் முதல் தொடங்கி நடைபெறும். 

பயிற்சி காலம் ஓராண்டாகும். இரண்டு பருவமுறைகளில் பயிற்சி நடைபெறும். பயிற்சிக்கான பாடத்திட்டம் தமிழில் மட்டுமே நடத்தப்படும். முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சியில் மாணவர்கள் சேர்வதற்கு 29.4.2024 முதல் மேலாண்மை நிலையத்தில் பதிவு செய்து கொள்ளப்படும். பயிற்சியில் சேர்வதற்கு விண்ணப்பிப்பதற்கான தேதி மற்றும் பயிற்சி கட்டண விவரங்கள் விரைவில் தெரிவிக்கப்படும். 

 இந்த பயிற்சி வகுப்பில் சேர நிபந்தனைகள் மற்றும் விவரங்கள் இணையவழியில் வெளியிடப்படும். இதுதொடர்பான கூடுதல் விவரங்களை கடலூர் டாக்டர் எம்.ஜி.ஆர். கூட்டுறவு மேலாண்மை நிலையம், கடற்கரை சாலை, சரவணபவா நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை வளாகம், கடலூர் என்ற முகவரியில் நேரில் சென்றோ அல்லது 04142-222619 என்ற செல்போன் எண் மற்றும் icmcuddrmgr@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாவும் அறிந்து கொள்ளலாம். மேற்கண்ட தகவலை மண்டல இணைப்பதிவாளர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment