மூன்றாம் பருவ தொகுத்தறி மதிப்பெண்களை எமிஸ் வலைதளத்தில் பதிவு செய்தல் - வழிகாட்டு நெறிமுறைகள் சார்ந்து தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள் - துளிர்கல்வி

Latest

Search This Site

Tuesday, April 23, 2024

மூன்றாம் பருவ தொகுத்தறி மதிப்பெண்களை எமிஸ் வலைதளத்தில் பதிவு செய்தல் - வழிகாட்டு நெறிமுறைகள் சார்ந்து தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள்

தொடக்கக் கல்வி 2023 - 2024 ஆம் கல்வி ஆண்டு - அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பிற்கான மூன்றாம் பருவ தொகுத்தறி மதிப்பெண்களை EMIS வலைத்தளத்தில் பதிவு செய்தல் குறித்து கீழ்காணும் அறிவுரைகள் வழங்கப்படுகிறது. 

1.இந்த ஆண்டு மூன்றாம் பருவ தொகுத்தறி மதிப்பெண்களை https://emis.tnschools.gov.in/ என்னும் வலைத்தளத்தில் உள்ளீட வேண்டும். 

2. விடைத்தாட்களை திருத்திய பின்னர் தொகுத்தறி மதிப்பெண்களை (60 மதிப்பெண்கள்) பாய வரியாக உடன் உள்ளீடு செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறது. இணைப்பு 1 இல் வழிகாட்டி நெறிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளன. 

3. மதிப்பெண்களை உள்ளீடு செய்யும்போது ஏற்படும் ஐயப்பாடுகளுக்குத் தீர்வு தொலைபேசி சேவையைப் 14417 என்ற கட்டணமில்லாத் காண பயன்படுத்த ஆசிரியர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். 

No comments:

Post a Comment