வாக்களிப்பதன் அவசியம் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு கல்வி நிறுவனங்களுக்கு, UGC அறிவுறுத்தல் - துளிர்கல்வி

Latest

Search This Site

Saturday, April 13, 2024

வாக்களிப்பதன் அவசியம் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு கல்வி நிறுவனங்களுக்கு, UGC அறிவுறுத்தல்

வாக்களிப்பதன் அவசியம் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு கல்வி நிறுவனங்களுக்கு, UGC அறிவுறுத்தல் பல்கலைக்கழக மானிய குழு (யு.ஜி.சி.) செயலாளர் மணிஷ் ஆர்.ஜோஷி, அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:- 


ஒவ்வொரு வாக்குகளின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், இந்திய தேர்தல் கமிஷன் குறும்படங்கள் உள்பட பல்வேறு படைப்புகளை உருவாக்கி உள்ளது. இந்த படைப்புகளை, கல்வி நிறுவனங்கள் தங்கள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள், பணியாளர்களுக்கு பகிர்ந்து, வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். நாட்டில் ஜனநாயகத்தை உறுதி செய்யும் வகையிலும், தேர்தலில் பங்கேற்பதை உறுதி செய்யும் வகையிலும் இந்திய தேர்தல் கமிஷன் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு கல்வி நிறுவனங்கள் தங்கள் பங்களிப்பை வழங்கவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment