வாக்கு சதவீதத்தை அதிகரிக்க புதிய முயற்சி
ஓட்டு போடும் பெற்றோரின் குழந்தைகளுக்கு கூடுதலாக 10 மதிப்பெண்கள்
உத்தரபிரதேச கல்லூரி அறிவிப்பு
தேர்தலில் வாக்கு சதவீதத்தை அதிகரிக்க தேர்தல் ஆணையம் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.
இதற்கெல்லாம் ஒருபடி மேலே போய், ஓட்டு போடும் பெற்றோரின் குழந்தைகளுக்கு கூடுதலாக 10 மதிப்பெண்கள் வழங்கப்படும் என்ற அறிவிப்பை கல்லூரி ஒன்று அறிவித்துள்ளது. உத்தரபிரதேசத்தின் லக்னோவில் உள்ள புனித ஜோசப் கல்லூரிதான் இந்த நூதன அறிவிப்பை அறிவித்துள்ளது.
அதாவது உத்தரபிரதேசத்தில் லக்னோ உள்ளிட்ட 14 தொகுதிகளில் வருகிற 20-ந்தேதி தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றியதற்கான அடையாளமாக கைகளில் இட்ட அடையாள மையை மறுநாள் (21-ந்தேதி) நடைபெறும் பெற்றோர் ஆசிரியர் கூட்டத்தில் காண்பித்தால், தேர்வில் அவர்களது குழந்தைகளுக்கு கூடுதலாக 10 மதிப்பெண்கள் வழங்கப்படும் என்று அந்த கல்லூரி அறிவித்துள்ளது.
இந்த மதிப்பெண் ஒரு பாடத்திற்கோ அல்லது வெவ்வேறு பாடங்களுக்கோ பிாித்து வழங்கப்படும் என்று கல்லூரி நிர்வாகி அனில் அகர்வால் கூறியுள்ளார். இதுதவிர தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு ஒரு நாள் ஊதியம் வெகுமதியாக அளிக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
இதேபோல் மற்றொரு கல்லூரி, ஓட்டுப்போட்டவர்களின் குழந்தைகளுக்கு கூடுதலாக 20 மதிப்பெண்கள் வழங்கப்படும் என்று அறிவித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது.
ليست هناك تعليقات:
إرسال تعليق