கடந்த 12 நாட்களில் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் சேர 2 லட்சம் பேர் விண்ணப்பம் - துளிர்கல்வி

Latest

Search This Site

Saturday, May 18, 2024

கடந்த 12 நாட்களில் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் சேர 2 லட்சம் பேர் விண்ணப்பம்

கடந்த 12 நாட்களில் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் சேர 2 லட்சம் பேர் விண்ணப்பம் 
தமிழக உயர்கல்வித்துறையின் கல்லூரி கல்வி இயக்ககத்தின் கீழ் 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்த கல்லூரிகளில், 1.07 லட்சம் கலை, அறிவியல் பட்டப்படிப்பு இடங்கள் உள்ளன. இதற்கான, 2024-25-ம் கல்வியாண்டு மாணவர் ஆன்லைன் விண்ணப்ப பதிவு கடந்த 6-ந்தேதி தொடங்கியது. பிளஸ்-2 நிறைவு செய்த மாணவர்கள் உயர்கல்வியில் சேர ஆர்வத்துடன் விண்ணப்பித்து வருகிறார்கள். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ‘பி.காம்' பட்டப்படிப்பில் சேர மாணவர்கள் அதிகளவு ஆர்வத்துடன் விண்ணப்பித்து வருகிறார்கள். இந்த நிலையில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கை விண்ணப்ப பதிவு எண்ணிக்கை 2 லட்சத்தை கடந்துள்ளது. நேற்று மாலை 6 மணி நிலவரபடி, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு, 2 லட்சத்து 5 ஆயிரத்து 448 விண்ணப்பங்கள் பதிவாகி உள்ளன. அதில், ஒரு லட்சத்து 59 ஆயிரத்து 815 மாணவர்கள் விண்ணப்ப கட்டணம் செலுத்தி உள்ளனர். அரசு கலை, அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க வருகிற 20-ந்தேதி கடைசி நாள். விருப்பமுள்ள மாணவர்கள், www.tngasa.inஎன்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

No comments:

Post a Comment