தமிழ்நாடு அரசு எம் ஜி ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனம் மாணவர் சேர்க்கை 2024-2025 கால அவகாசம் நீட்டிப்பு - துளிர்கல்வி

Latest

Search This Site

Tuesday, May 21, 2024

தமிழ்நாடு அரசு எம் ஜி ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனம் மாணவர் சேர்க்கை 2024-2025 கால அவகாசம் நீட்டிப்பு

தமிழ்நாடு அரசு எம் ஜி ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனம் மாணவர் சேர்க்கை 2024-2025 கால அவகாசம் நீட்டிப்பு 

தமிழ்நாடு அரசு செய்தி மக்கள் தொடர்புத்துறை தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனம் (தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலைப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டது) சி. ஐ. டி. வளாகம், தரமணி, சென்னை-600113. மாணவர் சேர்க்கை 2024-2025-கால அவகாசம் நீட்டிப்பு 
இளங்கலை-காட்சிக்கலை பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் படிவங்கள் பதிவிறக்கம் செய்வதற்கான கால அவகாசம் 05.06.2024 வரை நீட்டிக்கப்படுகிறது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் 10.06.2024, மாலை 5.00 மணி வரை நீட்டிக்கப்படுகிறது. தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தில் தமிழ்நாடு அரசின் இட ஒதுக்கீடு அடிப்படையிலும், குறிப்பாக அரசு பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கான இட ஒதுக்கீடும், மாற்றுத் திறனாளிகளுக்கான இட ஒதுக்கீடு நடைமுறைகளைப் பின்பற்றியும் மாணவர் சேர்க்கை நடைபெறும். விண்ணப்பப் படிவங்கள் மற்றும் தகவல் தொகுப்பேட்டினை www.tn.gov.in எனும் இணையதளம் மூலமாக பதிவிறக்கம் செய்திடலாம். மேலும் விவரங்களுக்கு தகவல் தொகுப்பேட்டினை பார்க்கவும். செ.ம.தொ.இ./496/வரைகலை/2024 முதல்வர் (முழு கூடுதல் பொறுப்பு) தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனம் சி.ஐ.டி வளாகம், தரமணி, சென்னை-600 113.

No comments:

Post a Comment