வரும் கல்வி ஆண்டு முதல் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகள் கற்றல் செயல்பாட்டில் புதுமையான உத்வேகமான மனநிலையோடு கல்வி கற்க 20,332 அரசுப் பள்ளிகளிலும் இணையதள வசதி - துளிர்கல்வி

Latest

Search This Site

Thursday, May 30, 2024

வரும் கல்வி ஆண்டு முதல் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகள் கற்றல் செயல்பாட்டில் புதுமையான உத்வேகமான மனநிலையோடு கல்வி கற்க 20,332 அரசுப் பள்ளிகளிலும் இணையதள வசதி

20,332 அரசுப் பள்ளிகளிலும் இணையதள வசதி 

வளர்ந்துவரும் தொழில்நுட்ப உலகில் எதிர்காலத்திற்கு ஏற்ற வகையில் அரசுப் பள்ளி மாணவர்களைத் தயார்படுத்தும் பொருட்டு தொழில்நுட்ப உள்கட்டமைப்பை மேம்படுத்துவது மிக முக்கியமானது என்பதைக் கருத்தில் கொண்டு, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சீரிய முயற்சியால் தமிழ்நாடு அரசு தற்போது தொழில்நுட்ப விரிவாக்க நிகழ்வினை ஒரு முன்னெடுப்பு நடவடிக்கையாக மேற்கொண்டு வருகிறது.

புத்தகங்கள் மற்றும் கரும்பலகைகள் வாயிலாக நடைபெற்ற கற்றல் கற்பித்தல் நிகழ்வின் ஓர் உச்சமாக உரைகள், படங்கள், ஆடியோ மற்றும் வீடியோ போன்ற பல்வேறு வடிவங்களில் தகவலைப் பெற்று பாடப் பொருள்களை எளிதாகப் புரிந்து கொள்ளவும், பெற்ற தகவல்களைத் தக்கவைத்துக் கொள்ளவும் மற்றும் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்குத் தொழில்நுட்பத்துடன் பொருத்தமான கற்றல் உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் (Hi-Tech Labs) சூழலை உருவாக்கவும் 8,180 ரூ.519.73 கோடி மதிப்பீட்டிலும் மற்றும் 22,931 திறன்மிகு வகுப்பறைகள் (Smart ரூ.455.32 கோடி மதிப்பீட்டிலும் 46,12,742 பயனடையும் வகையில் அமைக்கப்பட்டு வருகின்றன. 
Click here to read more

No comments:

Post a Comment