குரூப்-4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு! பதிவிறக்கம் செய்வது எவ்வாறு? - துளிர்கல்வி

Latest

Search This Site

Tuesday, May 28, 2024

குரூப்-4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு! பதிவிறக்கம் செய்வது எவ்வாறு?

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.) தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி அஜய் யாதவ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்-4 பதவிகளுக்கான கொள்குறி வகை (ஓ.எம்.ஆர். முறை) தேர்வு வருகிற ஜூன் 9-ந்தேதி முற்பகல் நடைபெறுகிறது. தேர்வு எழுத தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் தேர்வுக்கூட அனுமதி சீட்டுகள் (ஹால் டிக்கெட்) www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.in என்ற தேர்வாணைய இணையதளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. விண்ணப்பதாரர்கள் தங்களுடைய ஒருமுறை பதிவேற்றம் (ஓ.டி.ஆர். டேஷ்போர்டு) மூலமாக விண்ணப்ப எண், பிறந்ததேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment