என்ஜினீயரிங் படிப்புக்கு 70 ஆயிரம் பேர் விண்ணப்பம் - துளிர்கல்வி

Latest

Search This Site

Friday, May 10, 2024

என்ஜினீயரிங் படிப்புக்கு 70 ஆயிரம் பேர் விண்ணப்பம்



என்ஜினீயரிங் படிப்புக்கு 70 ஆயிரம் பேர் விண்ணப்பம் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு 6-ந்தேதி வெளியான நிலையில், அன்றைய தினத்தில் இருந்து என்ஜினீயரிங் படிப்புக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவும் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன்படி, முதல்நாளில் 20 ஆயிரம் பேர் விண்ணப்பித்தனர். அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் விண்ணப்பித்து வருகின்றனர். விண்ணப்பப் பதிவு தொடங்கி 4-வது நாளான நேற்று 69 ஆயிரத்து 953 பேர் விண்ணப்பப் பதிவு செய்து இருந்தனர். அவர்களில் 32 ஆயிரத்து 834 பேர் விண்ணப்பக் கட்டணத்தை செலுத்தியும், 12 ஆயிரத்து 584 பேர் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்தும் இருக்கின்றனர். விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் அடுத்த மாதம் (ஜூன்) 6-ந்தேதி ஆகும்.

No comments:

Post a Comment