தமிழக பள்ளிக்கல்வித்துறை நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நடப்பு கல்வியாண்டில் ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வில் பங்கேற்க, தொடக்கக்கல்வி இயக்ககத்தின் கீழ் பணிபுரியும் ஆசிரியர்களில், 18 ஆயிரத்து 920 விண்ணப்பங்கள் இடைநிலை ஆசிரியர் மாறுதலுக்கும், 9 ஆயிரத்து 295 விண்ணப்பங்கள் பட்டதாரி ஆசிரியர் மாறுதலுக்கும், 5 ஆயிரத்து 814 விண்ணப்பங்கள் தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் மாறுதலுக்கும், 1,640 விண்ணப்பங்கள் நடுநிலை பள்ளி தலைமையாசிரியர் மாறுதலுக்கும் என மொத்தம் 35 ஆயிரத்து 669 விண்ணப்பங்கள் பதிவிடப்பட்டுள்ளன.
பள்ளிக்கல்வித்துறை நிர்வாகத்தின் கீழ் செயல்படும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களில், 25 ஆயிரத்து 711 விண்ணப்பங்கள் பட்டதாரி ஆசிரியர் மாறுதலுக்கும், 17 ஆயிரத்து 296 விண்ணப்பங்கள் முதுகலை பட்டதாரி ஆசிரியர் மாறுதலுக்கும், 1,186 விண்ணப்பங்கள் உயர்நிலை பள்ளி தலைமையாசிரியர் மாறுதலுக்கும், 1,452 விண்ணப்பங்கள் மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர் மாறுதலுக்கும், 176 விண்ணப்பங்கள் உடற்கல்வி இயக்குனர் மாறுதலுக்கும், 989 விண்ணப்பங்கள் இடைநிலை, இதர ஆசிரியர் மாறுதலுக்கும் என மொத்தம் 46 ஆயிரத்து 810 விண்ணப்பங்கள் பதிவிடப்பட்டுள்ளன. மொத்தம் 82 ஆயிரத்து 479 விண்ணப்பங்கள் பதிவிடப்பட்டு உள்ளன.
பிறகு, முன்னுரிமை பட்டியல் வெளியிட்டு, மாறுதல் கலந்தாய்வு நடத்தப்படும். கலந்தாய்வு நடைபெறும் தேதி விரைவில் அறிவிக்கப்படும். மேலும், உயர்நிலை பள்ளி தலைமையாசிரியர்கள், மேல்நிலை பள்ளிகளில் பணிபுரியும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு நடைபெறும் நாள் விரைவில் அறிவிக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment