ஐ.டி.ஐ. படிப்பில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம் - துளிர்கல்வி

Latest

Search This Site

Friday, May 10, 2024

ஐ.டி.ஐ. படிப்பில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் 102 அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் (ஐ.டி.ஐ.) மற்றும் 305 தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் இயங்கி வருகின்றன. இதில் 2024-25-ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. 8-ம் வகுப்பு மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி பெற்ற மாணவர்கள் விண்ணப்பங்களை www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் விண்ணப்பிக்கலாம். இதற்கான கடைசி தேதி அடுத்த மாதம் (ஜூன்) 7-ந்தேதி ஆகும்.இணையதளத்தில் பதிவு செய்ய வசதி இல்லாத மாணவர்கள், தமிழ்நாடு முழுவதும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 136 உதவி மையங்கள் மூலமாக சேர்க்கை பதிவை மேற்கொள்ளலாம் எனவும், அந்த மையங்களின் விவரங்கள் மேற்சொன்ன இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது எனவும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.இதுதொடர்பான மேலும் விவரங்களுக்கு 9499055689 என்ற செல்போன் எண் வாயிலாகவும், itiadmission2024@gmail.com என்ற மின்னஞ்சல் வாயிலாகவும் தொடர்பு கொண்டு தெரிந்துகொள்ளலாம்.

No comments:

Post a Comment