தமிழக மாற்றுத்திறனாளிகள் நல இயக்குனர் லட்சுமி, அனைத்து மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர்களுக்கும் அனுப்பிய கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-
மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் அனைத்து திட்டங்களிலும் பயன்பெறுவதற்கு, மாற்றுத்திறனாளிகள் தங்கள் ஆதார் எண்களை சமர்ப்பிக்கும்படி 26.9.2022 அன்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து, மாவட்டத்தில் அனைத்து திட்டங்களிலும் பயன்பெறும் மாற்றுத்திறனாளிகளின் ஆதார் எண்களை பெற்று அதை கணினிமயமாக்க மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்திடம் இருந்து அனைத்து அரசு செயலாளர்களுக்கு நேர்முக கடிதம் அனுப்பப்பட்டது. அதில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் அனைத்து திட்டங்கள் மூலமாகவும் பயன்பெற, அவர்களின் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை எண் அல்லது பதிவு நம்பரை, மாற்றுத்திறனாளிக்கான மருத்துவச் சான்றிதழுடன் 1.4.2023 முதல் இணையதளத்தில் சமர்ப்பிப்பது கட்டாயமானதாகும் என்று தெரிவிக்கப்பட்டது.
எனவே அனைத்து மாவட்டங்களிலும் மாற்றுத்திறனாளிகளின் ஆதார் நம்பர் மற்றும் அவர்களுக்கான தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை நம்பர் ஆகியவற்றை பெறுவது அவசியமானதாகும்.
அவர்கள் ஆதார் எண்ணுக்காக விண்ணப்பிக்கவும், தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டைக்காக விண்ணப்பிக்கவும், மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து விண்ணப்பங்களைப் பெற்று ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ليست هناك تعليقات:
إرسال تعليق