‘எமிஸ்' தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்த பெற்றோரின் செல்போன் எண்களில் சரிபார்ப்பு சதவீதம்? கல்வித்துறை வெளியீடு - துளிர்கல்வி

Latest

Search This Site

Friday, May 31, 2024

‘எமிஸ்' தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்த பெற்றோரின் செல்போன் எண்களில் சரிபார்ப்பு சதவீதம்? கல்வித்துறை வெளியீடு

பள்ளிக்கல்வித் துறை மாணவ-மாணவிகள் மற்றும் கல்வித்துறையின் கல்வி சார்ந்த செயல்பாடுகளை பெற்றோர் அறிந்து கொள்ளும் வகையில் வாட்ஸ்-அப் செயலியில் புதிய தளத்தை உருவாக்கி இருக்கிறது. 

அதில் பெற்றோரை இணைக்கு முயற்சி நடந்து வருகிறது. அந்தவகையில் கல்வித்துறையின் கீழ் இருக்கும் கல்வி மேலாண்மை தகவல் முகமை (எமிஸ்) இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு இருக்கும் மாணவ-மாணவிகளின் பெற்றோருடைய செல்போன் எண்ணை சரிபார்க்கும் பணி தொடங்கி நடக்கிறது. 

இந்த ‘எமிஸ்' தளத்தில் ஒரு கோடியே 27 லட்சத்து 20 ஆயிரத்து 933 மாணவ-மாணவிகளின் செல்போன் எண்கள் தற்போது இருக்கின்றன. இந்த எண்கள் கடந்த சில நாட்களாக சரிபார்க்கப்பட்டு வருகின்றன. இதுவரை 99 லட்சத்து 22 ஆயிரத்து 608 செல்போன் எண்கள் சரிபார்க்கப்பட்டு இருப்பதாகவும், 27 லட்சத்து 98 ஆயிரத்து 325 எண்கள் சரிபார்க்கப்பட உள்ளதாகவும் கல்வித்துறை தெரிவித்துள்ளது. அதாவது, 78 சதவீதம் செல்போன் எண்கள் சரிபார்க்கப்பட்டு விட்டன. மீதமுள்ள செல்போன் எண்களும் விரைவில் சரிபார்க்கப்பட்டு, வரும் கல்வியாண்டில் இருந்து எமிஸ் தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்த மாணவ-மாணவிகளின் பெற்றோர் செல்போன் எண்ணுக்கு கல்வி சார்ந்த செயல்பாடுகள் அனுப்பி வைக்கப்பட இருக்கின்றன.

No comments:

Post a Comment