‘நீட்' தேர்வுக்கான தற்காலிக விடைக்குறிப்புகள் வெளியீடு ஆட்சேபனைகளை தெரிவிக்க அவகாசம் - துளிர்கல்வி

Latest

Search This Site

Friday, May 31, 2024

‘நீட்' தேர்வுக்கான தற்காலிக விடைக்குறிப்புகள் வெளியீடு ஆட்சேபனைகளை தெரிவிக்க அவகாசம்

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான ‘நீட்’ நுழைவுத் தேர்வு ஒவ்வொரு ஆண்டும் தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ.) நடத்தி வருகிறது. அந்தவகையில் 2024-25-ம் கல்வியாண்டில் மருத்துவம் சார்ந்த படிப்புகளில் சேருவதற்கு நீட் தேர்வு கடந்த 5-ந்தேதி நாடு முழுவதும் 571 நகரங்களில் 4 ஆயிரத்து 750 மையங்களில் நடத்தப்பட்டது. இந்த தேர்வை எழுதுவதற்கு சுமார் 24 லட்சம் பேர் விண்ணப்பித்து இருந்தனர். இது முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகமானோர் விண்ணப்பித்திருந்தனர். தேர்வு முடிந்து கிட்டதட்ட 3 வாரங்களுக்கு மேல் ஆகிவிட்ட நிலையில், தேர்வுக்கான விடைக்குறிப்புகள் வெளியிடப்படாமல் இருந்தன. அதனை தேர்வர்கள் பெரிதும் எதிர்பார்த்து வந்த நிலையில், தற்காலிக விடைக்குறிப்புகள், ஓ.எம்.ஆர். விடைத்தாள் நகல் ஆகியவற்றை https://exams.nta.ac.in/ என்ற இணையதளத்தில் தேர்வை நடத்திய தேசிய தேர்வு முகமை பதிவேற்றம் செய்து அதனை வெளியிட்டுள்ளது. தற்காலிக விடைக்குறிப்புகள் மீது தேர்வர்களுக்கு ஏதேனும் ஆட்சேபனைகள் இருக்கும்பட்சத்தில் அதற்கு தேசிய தேர்வு முகமை இணையதளத்துக்கு சென்று இன்று(வெள்ளிக்கிழமை) இரவுக்குள் விண்ணப்பிக்கலாம். ஒரு வினாவுக்கு ரூ.200 கட்டணம் செலுத்தி தகுதியான ஆட்சேபனைகளை தெரிவிக்கலாம். இந்த கட்டணத்தை திரும்ப பெற முடியாது. ஆட்சேபனைகள் தெரிவிக்கும் விடைக்குறிப்புகளில் தவறுகள் இருப்பது பாட நிபுணர்கள் குழுவால் உறுதி செய்யப்பட்டால், விடைக்குறிப்புகள் திருத்தம் செய்யப்பட்டு வெளியிடப்படும். விடைக்குறிப்புகளில் எந்த ஆட்சேபனைகளும் தெரிவிக்கப்படாவிட்டால், இன்று இரவு 11.50 மணிக்கு விடைக்குறிப்புகள் இறுதி செய்யப்படும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment