பள்ளிகளில் விடுமுறை கால வகுப்புகளுக்கு தடை - துளிர்கல்வி

Latest

Search This Site

Friday, May 3, 2024

பள்ளிகளில் விடுமுறை கால வகுப்புகளுக்கு தடை

பள்ளிகளில் விடுமுறை கால வகுப்புகளுக்கு தடை கேரளாவில் வரலாறு காணாத வெயில் காரணமாக வெப்ப அலை அதிகரித்து உள்ளது. சுட்டெரிக்கும் வெயில் காரணமாக உயிர் பலியும் ஏற்பட்டுள்ளது. 
இதுவரை 16 பேர் பலியாகியுள்ளனர். இந்தநிலையில் முதல்-மந்திரி பினராயி விஜயன் தலைமையில் உயர் அதிகாரிகளின் அவசர ஆலோசனை கூட்டம் திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வருகிற 6-ந் தேதி வரை கல்லூரி உள்ளிட்ட உயர் கல்வி நிறுவனங்களை மூட தீர்மானிக்கப்பட்டது. பள்ளிகளில் நடைபெற்று வரும் விடுமுறை கால பயிற்சி வகுப்புகளை பகல் 11 மணி முதல் மாலை 3 மணி வரை நடத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment