பள்ளிகளில் விடுமுறை கால வகுப்புகளுக்கு தடை
கேரளாவில் வரலாறு காணாத வெயில் காரணமாக வெப்ப அலை அதிகரித்து உள்ளது. சுட்டெரிக்கும் வெயில் காரணமாக உயிர் பலியும் ஏற்பட்டுள்ளது.
இதுவரை 16 பேர் பலியாகியுள்ளனர். இந்தநிலையில் முதல்-மந்திரி பினராயி விஜயன் தலைமையில் உயர் அதிகாரிகளின் அவசர ஆலோசனை கூட்டம் திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வருகிற 6-ந் தேதி வரை கல்லூரி உள்ளிட்ட உயர் கல்வி நிறுவனங்களை மூட தீர்மானிக்கப்பட்டது. பள்ளிகளில் நடைபெற்று வரும் விடுமுறை கால பயிற்சி வகுப்புகளை பகல் 11 மணி முதல் மாலை 3 மணி வரை நடத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது.
ليست هناك تعليقات:
إرسال تعليق