தேசிய சாகச விருது பெற தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் - துளிர்கல்வி

Latest

Search This Site

الجمعة، 31 مايو 2024

தேசிய சாகச விருது பெற தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் சரயு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- மத்திய அரசின் சார்பில் 2023-ம் ஆண்டிற்கான டென்சிங் நார்கே தேசிய சாகச விருதுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த விருதை பெற தகுதியுடையவர்கள், 2021, 2022 மற்றும் 2023-ம் ஆண்டுகளில் சாதனை புரிந்தவர்களில் குறிப்பாக சாகச துறைகளில் உள்ள நபர்களின் சாதனைகளை அங்கீகரித்திடும் வகையில் இந்த விருது வழங்கப்படுகிறது. இளம் வயதில் வீரதீர செயல் புரிந்தவர்கள், சிறந்த விளையாட்டு வீரர்கள், குழு உறுப்பினர்களாகவும், சரியான நேரத்தில், நெருக்கடியான நேரத்தில் எடுக்கப்படும் முடிவினால் சாதித்தவர்களாகவும், பல உயிர்களை காப்பாற்றியவர்கள், தன் உயிரைப் பற்றி கவலைபடாமல் செயல்பட்டவர்கள், ராணுவம், கடற்படை, விமானப்படையில் வீரதீர செயல்புரிந்தவர்கள், இவ்வீரதீர செயல் மலையேற்றத்திற்கும், அதாவது மூன்று நிலைகளில் நிலம், கடல், ஆகாயம் ஆகியவற்றில் சாகச சாதனை புரிந்தவர்கள் ஆகியோர் தகுதியுடையவர்கள் ஆவர். இந்த விருது பெறுபவர்களுக்கு ரூ.15 லட்சம் வழங்கப்படுவதுடன், வெண்கல சிலை, சான்றிதழ், சில்க் டைகொண்டபிளேசர் ஆகிய வழங்கப்படும். இந்த விருதிற்கு விண்ணப்பிப்பவர்கள் http://awards.gov.in என்ற இணையதள முகவரி மூலம் இன்றைக்குள்(வெள்ளிக்கிழமை) விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ليست هناك تعليقات:

إرسال تعليق