பொதுவாக மழைக்காலங்களில் அதிகனமழை, மிக கனமழை, கனமழை, மிதமான மழை ஆகியவற்றுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக முறையே சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள் மற்றும் பச்சை எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.
அதேபோல், வெயில் காலங்களிலும் வெயிலின் தாக்கத்தை பொறுத்து என்ன மாதிரியான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்? என்பதை நிர்வாக ரீதியில் தெரிவிக்க பச்சை, மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு என 4 வண்ணங்களிலும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.
அதன் விவரம் வருமாறு:-
* ‘பச்சை’ எச்சரிக்கை என்பது பிரச்சினை எதுவும் இல்லை என்பதை குறிக்கிறது.
* ‘மஞ்சள்’ எச்சரிக்கை வெயிலின் தாக்கம் சற்று அதிகமாக இருக்கும். எனவே, அரசு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதை உணர்த்துகிறது.
* ‘ஆரஞ்சு’ எச்சரிக்கையை பொறுத்தவரையில், வெயிலின் தாக்கம் மோசமாக இருக்கும் என்பதை உணர்த்துவதோடு, போக்குவரத்து, மின்சார வினியோகம் ஆகியவற்றை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும், அதற்கு ஏற்றாற்போல் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என அறிவுறுத்தல் விடுக்கப்படுகிறது. இதில் பொதுமக்களும் உஷாராக இருப்பது அவசியம்.
* ‘சிவப்பு’ எச்சரிக்கை வெப்ப அலையின் தாக்கம் மிகவும் மோசமாக இருக்கும் என்பதையும், அந்த நேரங்களில் பொதுமக்கள் வெளியில் நடமாடுவதை தவிர்க்க வேண்டும் என்பதையும், மக்கள் பாதிக்கப்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்பதையும் குறிக்கிறது.
No comments:
Post a Comment