பட்டதாரி, வட்டார வள மைய ஆசிரியர் பணியிடங்கள்: சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வானவர்களின் பட்டியல் வெளியீடு TRB தகவல் - துளிர்கல்வி

Latest

Search This Site

Monday, May 27, 2024

பட்டதாரி, வட்டார வள மைய ஆசிரியர் பணியிடங்கள்: சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வானவர்களின் பட்டியல் வெளியீடு TRB தகவல்

பட்டதாரி, வட்டார வள மைய ஆசிரியர் பணியிடங்கள்: சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வானவர்களின் பட்டியல் வெளியீடு TRB தகவல் பட்டதாரி ஆசிரியர், வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுனர் பணிகளில் உள்ள 3,192 காலியிடங்களுக்கான போட்டித்தேர்வு கடந்த பிப்ரவரி மாதம் 4-ந் தேதி நடந்தது. இந்த தேர்வை 40 ஆயிரத்து 136 பேர் எழுதி இருந்தனர். 
தேர்வு எழுதியவர்களுக்கான தேர்வு முடிவு கடந்த 18 மற்றும் 22-ந் தேதிகளில் வெளியானது. அதன்படி, போட்டித்தேர்வில் பெற்ற மதிப்பெண் மற்றும் ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 2-ல் தகுதிபெற்ற ஆண்டுகளின் அடிப்படையில் தகுதி மதிப்பெண் ஆகியவற்றை கணக்கில் கொண்டு பாடங்களுக்கு 1:1.25 என்ற விகிதாச்சாரப்படி சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வானவர்களின் பட்டியல் தயார் செய்யப்பட்டு https://trb.tn.gov.in/ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டு இருப்பதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. 

சான்றிதழ் சரிபார்ப்பு கணிதம், தாவரவியல், விலங்கியல், புவியியல் பாடங்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு வருகிற 30, 31-ந் தேதிகளில் சென்னையில் நடைபெற உள்ளது. இதுதொடர்பான மேலும் விவரங்களுக்கும், கோரிக்கைகளை தெரிவிப்பதற்கும், trbgrievances@tn.gov.in என்ற மின்னஞ்சல் முகவரியிலும், 18004256753 என்ற இலவச எண்ணிலும் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்து இருக்கிறது.

No comments:

Post a Comment