குரூப்-2, 2ஏ பதவிகளில் வரும் 2,327 காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஜூலை 19-ம்தேதி கடைசிநாள் - துளிர்கல்வி

Latest

Search This Site

Friday, June 21, 2024

குரூப்-2, 2ஏ பதவிகளில் வரும் 2,327 காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஜூலை 19-ம்தேதி கடைசிநாள்



குரூப்-2, 2ஏ பதவிகளில் வரும் 2,327 காலியிடங்களுக்கு அடுத்த மாதம் (ஜூலை) 19-ம்தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்றும், அதற்கான முதல்நிலைத் தேர்வு செப்டம்பர் மாதம் 14-ம்தேதி நடக்கிறது என்றும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) அறிவித்துள்ளது. 

 2,327 பணியிடங்கள்... 

குரூப்-2 பதவிகளில் 13 உதவி ஆய்வாளர்கள், 336 துணை வணிக வரி அலுவலர்கள், 5 இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர்கள், ஒரு நன்னடத்தை அலுவலர், 5 துணை பதிவாளர்கள், 2 சிறப்பு உதவியாளர்கள், 21 சிறப்பு கிளை உதவியாளர்கள், 10 உதவி பிரிவு அலுவலர்கள், 114 வனத்துறை அலுவலர் உள்பட 507 பணியிடங்கள் இருக்கின்றன. இதேபோல், குரூப்-2ஏ பதவிகளில் மேலாண்மை இயக்குனர் மற்றும் தலைவருக்கான ஒரு தனி உதவியாளர், ஒரு முழுநேர குடியிருப்பு பாதுகாவலர், 497 மூத்த ஆய்வாளர்கள், 4 தணிக்கை ஆய்வாளர்கள், 273 உதவி ஆய்வாளர்கள், 2 கைத்தறி ஆய்வாளர்கள், 12 மேற்பார்வையாளர்கள், 27 வணிகவரி உதவியாளர்கள், 124 வருவாய் உதவியாளர்கள், மற்ற துறைகளில் உள்ள 669 உதவியாளர்கள், 38 கணக்காளர்கள், 5 இளநிலை கணக்காளர்கள், ஒரு ஆண் பாதுகாவலர், 22 விரிவாக்க அதிகாரி, 5 கீழ்நிலை கிளர்க்குகள், 2 நிர்வாக அலுவலர்கள், 8 இளநிலை கூட்டுறவு தணிக்கையாளர்கள், 8 தணிக்கை உதவியாளர்கள் உள்ளிட்ட 1,820 பணியிடங்கள் உள்ளன. ஆக மொத்தம் அரசுத் துறைகளில் குரூப்-2, 2ஏ பதவிகளில் 2 ஆயிரத்து 327 காலியிடங்கள் இருப்பதாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) தெரிவித்துள்ளது. அடுத்த மாதம் 19-ம்தேதி கடைசிநாள் இந்த பணியிடங்களுக்கு அடுத்த மாதம் (ஜூலை) 19-ம்தேதிக்குள் www.tnpsc.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும் என்றும், விண்ணப்பங்களில் திருத்தங்கள் மேற்கொள்ள அடுத்த மாதம் 24-ம்தேதி முதல் 26-ம்தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டு இருக்கிறது என்றும் டி.என்.பி.எஸ்.சி. அறிவித்து இருக்கிறது. விண்ணப்பித்தவர்களுக்கான முதல்நிலைத் தேர்வு வருகிற செப்டம்பர் மாதம் 14-ம்தேதி காலை 9.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை நடைபெற உள்ளது. முதல்நிலைத் தேர்வை பொறுத்தவரையில் பொது பாடம், திறனறிவு, மொழிப் பாடம் ஆகியவற்றை உள்ளடக்கி 200 வினாக்கள் கேட்கப்பட்டு, 300 மதிப்பெண்களுக்கு நடத்தப்பட இருக்கிறது. இதில் 90 மதிப்பெண் குறைந்தபட்ச தகுதியாக சொல்லப்பட்டுள்ளது. 

 தனித்தனியாக முதன்மைத் தேர்வு 

அதனைத் தொடர்ந்து முதன்மைத் தேர்வு நடத்தப்படும். இந்த முறை குரூப்-2 பதவிகளுக்கும், 2ஏ பதவிகளுக்கும் தனித்தனியே முதன்மைத் தேர்வுகள் நடத்தப்பட இருக்கின்றன. இதற்கு முன்பு இந்த 2 பதவிகளுக்கு ஒரே மாதிரியாக முதன்மைத் தேர்வு நடத்தப்பட்டது. மேலும் இதுவரை குரூப்-2 பதவிகளுக்கு முதல்நிலை, முதன்மை, நேர்முகத் தேர்வு அடிப்படையில் ஆட்சேர்ப்பு நடந்து வந்த நிலையில், இந்த ஆண்டில் இருந்து குரூப்-2ஏ பதவிகளுக்கான நியமனம் போல, முதன்மைத் தேர்வு மதிப்பெண் அடிப்படையிலேயே தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

No comments:

Post a Comment