அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிநிரவல் கலந்தாய்வில் 244 ஆசிரியர்கள் இடமாற்றம் - கல்வித் துறை - துளிர்கல்வி

Latest

Search This Site

Saturday, June 1, 2024

அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிநிரவல் கலந்தாய்வில் 244 ஆசிரியர்கள் இடமாற்றம் - கல்வித் துறை

2023-24-ம் கல்வியாண்டுக்கான மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர் நிர்ணயம் செய்ததின் அடிப்படையில் உபரியாக பணிபுரிந்து வரும் அரசு நிதி உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்களுக்கு பணி நிரவல் கலந்தாய்வு நடந்தது. 

இந்த கலந்தாய்வு மூலம் தற்போது பணிபுரிந்து வரும் மாவட்டத்துக்குள் பிற சிறுபான்மையற்ற அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு 214 ஆசிரியர்கள் பணிநிரவல் செய்யப்பட்டனர். மேலும் கூட்டு மேலாண்மை நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வரும் நிதியுதவி பெறும் பள்ளிகளின் நிர்வாகத்தின் மூலம் அவர்களுடைய நிர்வாக கட்டுப்பாட்டில் உள்ள காலிப்பணியிடம் இருக்கும் பள்ளிகளுக்கு 30 ஆசிரியர்கள் பணிநிரவல் செய்யப்பட்டுள்ளன. 

ஆக மொத்தம் பணிநிரவல் கலந்தாய்வு மூலம் அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலியாக இருந்த 244 இடங்களில் ஆசிரியர்கள் மாற்றம் செய்யப்பட்டு இருக்கின்றனர். இதனால் 2024-25-ம் கல்வியாண்டில் இந்த பள்ளிகளில் கல்விசார் செயல்பாடுகள் தொய்வின்றி நடைபெற வழிவகை செய்யப்பட்டிருப்பதாக கல்வித் துறை தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment