அரசு தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் 4 ஆண்டுகள் பகுதி நேர பி.இ. பட்டப்படிப்பு சேர்க்கை 2024-2025 - துளிர்கல்வி

Latest

Search This Site

السبت، 1 يونيو 2024

அரசு தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் 4 ஆண்டுகள் பகுதி நேர பி.இ. பட்டப்படிப்பு சேர்க்கை 2024-2025

தமிழ்நாடு அரசு தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் Q&GOT 60 60-600 025 ை 4 ஆண்டுகள் பகுதி நேர பி.இ. பட்டப்படிப்பு சேர்க்கை 2024-2025 டிப்ளமோ பயின்ற மாணாக்கர்களுக்கு மட்டும்) விளம்பர அறிக்கை எண்.16117/ ஜே1/2024 

தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 6 அரசு பொறியியல் கல்லூரிகள், 2 அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகளில் 2024-2025ஆம் கல்வியாண்டிற்கு, தகுதி வாய்ந்த டிப்ளமோ படிப்பு முடித்த விண்ணப்பதாரர்களிடமிருந்து 4 ஆண்டுகள் பகுதிநேர பி.இ. பட்டப்படிப்பிற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்கும் முறை: www.ptbe-tnea.com என்ற இணையதளம் வாயிலாக மட்டுமே விண்ணப்பித்தல் வேண்டும். சான்றிதழ்களையும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். தகுதி : விண்ணப்பதாரர் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாளன்று டிப்ளமோ படிப்பு முடித்து, இரண்டு ஆண்டுகள் முழுமையாக நிறைவு பெற்றிருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் பணிபுரிகிறவராகவோ அல்லது இரண்டு ஆண்டுகள் பணிபுரிந்திருந்தவராகவோ இருக்க வேண்டும். > பதிவுக் கட்டணம்: பதிவுக் கட்டணத்தை விண்ணப்பதாரர் Debit Card / Credit Card / Net Banking இணையதளம் வாயிலாக செலுத்தலாம். 

இணையதள வாயிலாக விண்ணப்பம் பதிவு மற்றும் சான்றிதழ் பதிவேற்றம் செய்ய: ஆரம்ப நாள் இறுதி நாள் 31.05.2024 27.06.2024 ணையதள வசதி இல்லாத விண்ணப்பதாரர்கள் விண்ணப்பப் படிவத்தினை இணையதளம் வாயிலாக பதிவுசெய்வதற்கு தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை சேவை (TFC) மையத்தினை பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்கள் அறிய www.ptbe-tnea.com என்ற இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம். தொடர்பு எண்: 0422-2590080, கைபேசி எண். 9486977757 செ.ம.தொ.இ/510/வரைகலை/2024 தொழில் நுட்பக் கல்வி ஆணையர் Q&GOT 60 GOT-600 025.

ليست هناك تعليقات:

إرسال تعليق