உப்பின் அளவு அதிகரித்தால்? - துளிர்கல்வி

Latest

Search This Site

Tuesday, June 11, 2024

உப்பின் அளவு அதிகரித்தால்?

உப்பின் அளவு அதிகரித்தால்...? 


உணவை பதப்படுத்த, சுவையை மேம்படுத்த, உணவை கெடுக்கும் பாக்டீரியா, பூஞ்சை போன்ற நுண்ணுயிரிகளை கட்டுப்படுத்த உப்பு காலம்காலமாக உதவி வருகிறது. இதன் காரணமாக, நீண்ட நாட்கள் வைத்திருந்து சாப்பிடும் உணவுப் பொருட்களை உப்பை சேர்த்து பதப்படுத்தி வைத்தனர். இன்றைய அவசர உலகில் பதப்படுத்தப்பட்ட உணவுகளில் அதிகளவு உப்பு பயன்படுத்தப்படுகிறது. 

அதிகப்படியான உப்பு காரணமாக பல்வேறு உடல்நல பிரச்சினைகள் ஏற்பட்டு வருகின்றன. அதிக உப்பு காரணமாக மனிதர்களிடம் உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு மற்றும் பக்கவாதம், வயிறு மற்றும் பெருங்குடல் புற்றுநோய், மூட்டு வாதம், முடக்கு வாதம், உடல் பருமன் போன்ற பாதிப்புகள் உருவாகின்றன. இன்றைக்கு பலருக்கும் உயர் ரத்த அழுத்த பாதிப்பு பரவலாக இருப்பதை காணலாம். பெரும்பாலும் இது அதிக உப்பு காரணமாக ஏற்படுகிறது. 

இதய நோய்கள் ஏற்பட சோடியம் குளோரைடு என்னும் இந்த உப்பு காரணமாகிறது. சோடியம் ரத்த நாளங்களில் உள்ள நீரின் அளவை அதிகரிக்கும்போது இதய நாளங்கள் பாதிக்கப்படுகின்றன. இது உயர் ரத்த அழுத்தத்திற்கு வழிவகுக்கிறது. இதனை தொடர்ந்து, மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தையும் அதிகரிக்கிறது. உடலில் அதிக அளவில் உப்பு சேரும்போது உடலில் நீர் பரவல் சமநிலை பாதிக்கப்படுகிறது. இதனால், உடலில் நீர் சுரப்பு வீக்கங்கள் ஏற்படுகின்றன. கால் பாதங்கள் வீக்கம் ஏற்பட உப்பு அதிகரிப்பு முக்கிய காரணம் ஆகும். இன்றைக்கு இளையதலைமுறை உப்பிட்டு பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளை அதிக அளவில் உண்பதால் சிறு வயதிலேயே பல்வேறு உடல்நல பாதிப்புக்கு ஆளாகும் அபாயம் உருவாகி உள்ளது. உப்பில்லாத பண்டம் குப்பையிலே என்பது பழமொழி. ஆனால், அளவுக்கு மிஞ்சினால் உப்பு உடலுக்கு தப்பு ஆகும் என்பதே உண்மை.

No comments:

Post a Comment