அரசின் நலத்திட்டங்களை பெற்றோர் அறிய ஒரு கோடி தொலைபேசி எண்கள் சரிபார்க்கப்பட்டுள்ளது பள்ளிக்கல்வித்துறை தகவல் - துளிர்கல்வி

Latest

Search This Site

Friday, June 7, 2024

அரசின் நலத்திட்டங்களை பெற்றோர் அறிய ஒரு கோடி தொலைபேசி எண்கள் சரிபார்க்கப்பட்டுள்ளது பள்ளிக்கல்வித்துறை தகவல்

தமிழக பள்ளிக்கல்வித்துறை செயலாளர் குமரகுருபரன், பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:- 
மாணவர்களின் கல்வி நலனில் அக்கறை கொண்டு, மாணவர் நலத்திட்டங்களை பள்ளிக்கல்வித்துறை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டங்கள், அனைத்தையும், உரிய நேரத்தில் மாணவர்களுக்கு கொண்டு சேர்ப்பது கடமை. மாணவர்களுக்கு வழங்கப்படும் நலத்திட்ட விவரத்தினை, பெற்றோர்களுக்கும் தெரிவிக்க வேண்டியது அவசியம். 

அதற்கு ஏதுவாக, பெற்றோரின் தொலைபேசி எண்களை சரிபார்க்கும் பணியானது மேற்கொள்ளப்பட்டது. இந்த பணியினை, முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்களின் வழிகாட்டுதலின்படி, பள்ளிக்கல்வித்துறை தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் முழுவீச்சில் மேற்கொண்டார்கள். 

இதுவரை, ஒரு கோடியே 2 லட்சத்து 13 ஆயிரத்து 156 மாணவர்களின் பெற்றோர்களின் தொலைபேசி எண்கள் சரிபார்க்கப்பட்டுள்ளன. மிகக்குறுகிய காலத்தில் இந்த பணியினை மேற்கொண்ட பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களின் பணி மகத்தானது. மிகவும் பாராட்டுக்குரியது. அரசு நலத்திட்டங்கள் வழங்கப்படும் விவரத்தினை தெரிப்பது மட்டுமல்லாது, மாணவர்களின் கல்விசார் செயல்பாடுகளை பெற்றோர் அறிந்து கொள்வதற்கு இது பெரிய உதவியாக அமைந்திடும். 

எஞ்சியுள்ள 25 லட்சத்து 7 ஆயிரத்து 77 மாணவர்களின் பெற்றோரின் தொலைபேசி எண்கள் சரிபார்க்க வேண்டியுள்ளது. இந்த பணியை பள்ளிகள் திறப்பதற்கு முன்பாக விரைந்து முடித்த பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் முழு ஒத்துழைப்பு அவசியம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment