பி.எஸ்.சி., பி.சி.ஏ. மாணவர்களுக்கு தொழில் திறன் பயிற்சி
சென்னை ஐ.ஐ.டி. தகவல்
சென்னை ஐ.ஐ.டி.யின் ‘பரவர்த்தக் டெக்னாலஜிஸ் பவுண்டேஷன்' நிறுவனம், பட்டதாரி இளைஞர்கள் வேலை வாய்ப்புகளை பெறும் வகையில், தொழில்நுட்ப திறனை மேம்படுத்தும் பயிற்சிகளை வழங்கி வருகிறது. அந்த வகையில், பி.எஸ்.சி. மற்றும் பி.சி.ஏ. படிப்பை நிறைவு செய்த மாணவர்களுக்கு, நெட்வொர்க்கிங் எசன்ஷியல்ஸ், கிளவுட் பண்டமெண்டல்ஸ், டிக்கெட்டிங் கருவிகள், லினக்ஸ், வின்டோஸ் அடிப்படைகள், ஸ்டோரேஜ் அண்ட் பேக் அப் அடிப்படைகள் என பல்வேறு பயிற்சிகள் வழங்க திட்டமிட்டுள்ளது. இந்த பயிற்சிகள் வருகிற ஜூலை மாதம் முதல் வாரத்தில் தொடங்க உள்ளது. முதல்கட்டமாக, கரூர், கோவை பகுதிகளை சேர்ந்த மாணவர்களுக்கு 3 மாத கால இலவச பயிற்சிகள் வழங்கப்படும் என்று சென்னை ஐ.ஐ.டி. தெரிவித்துள்ளது. பயிற்சியில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள், https://forms.gle/7RhAKgrGRgwr17zd6 என்ற இணையதள முகவரியில் பதிவு செய்யலாம் என்று சென்னை ஐ.ஐ.டி. தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment