எஸ்பிஐ வங்கியில் வேலைவாய்ப்பு | விண்ணப்பிக்க கடைசி நாள் 08.08.2024
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்.. கல்வி தகுதி என்ன? வயது வரம்பு போன்ற விவரங்களை பார்க்கலாம். இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கி ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா. நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான கிளைகளுடன் ஸ்டேட் வங்கி இயங்கி வருகிறது.
எஸ்.பி.ஐ வங்கியில் ஏற்படும் காலிப்பணியிடங்கள் அவ்வப்போது உரிய அறிவிப்பு வெளியிடப்பட்டு நிரப்படுகின்றன.அந்த வகையில் நாடு முழுவதும் உள்ள எஸ்.பி.ஐ வங்கியில் பணியாற்ற சிறப்பு அதிகாரி (SO) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு கல்வி தகுதி என்ன? வயது வரம்பு உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்..
பணியின் விவரம்:
மத்திய ஆராய்ச்சி குழு (Central Research Team) - 02
மத்திய ஆராய்ச்சி குழு (சப்போர்ட்) - 02
திட்ட மேம்பாட்டு மேலாளர் (தொழில்நுட்பம்) - 1
திட்ட மேம்பாட்டு மேலாளர் (வணிகம்) - 02
ரிலேஷன்ஷிப் மேனேஜர் ஆர்எம் ரெகுலர் போஸ்ட் - 150
ரிலேஷன்ஷிப் மேனேஜர் (பேக்லாக் போஸ்ட்) - 123
VP Wealth Regular Post - 600 என்பன உள்பட 10 வகையான பதவிகளில் மொத்தம் 1040 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது
கல்வி தகுதி: பணியின் தன்மைக்கேற்ப கல்வி தகுதி மாறுபடும். எம்.பி.ஏ/ எம்.சிஏ போன்ற உயர் படிப்புகளும் சில பணியிடங்களுக்கு கோரப்பட்டுள்ளன. போதிய பணி அனுபவமும் அவசியம். சில பணியிடங்களுக்கு சந்தை நிலவரம் குறித்த விவரங்களும் தெரிந்து இருப்பது அவசியம். கல்வி தகுதி குறித்த முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தேர்வு அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க விரும்புவர்கள் தேர்வு ஒருமுறை முழுமையாக படித்து தெரிந்து கொண்ட பின்னர் விண்ணபிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்
வயது வரம்பு: ஆகஸ்ட் 1, 2024 ஆம் தேதிப்படி குறைந்த பட்சம் 23 வயது நிரம்பியிருக்க வேண்டும்.
அதிகபட்ச வயது 30, 45 என பணியின் தன்மைக்கேற்ப நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தேர்வு முறையை பொறுத்தவரை விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். அதன்பிறகு மெரிட் லிஸ்டில் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.. 5 ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் செய்யப்படுவார்கள். இதில் முதலாவது ஆண்டு தகுதி காண் காலமாகும்.
விண்ணப்ப கட்டணம்:
தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப கட்டணமாக ரூ.750 செலுத்த வேண்டும். எஸ்.சி/எஸ்.டி பிரிவினருக்கு கட்டணம் கிடையாது. ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கால அவகாசம் இன்று முதல் தொடங்கியுள்ளது. விண்ணப்பிக்க கடைசி நாள் வரும் 08.08.2024 ஆகும். தேர்வு அக்டோபர் - நவம்பர் கால கட்டத்தில் நடைபெற வாய்ப்பு உள்ளது. விண்ணப்பதாரகள் தேர்வு அறிவிப்பினை இந்த இணையதளத்தில் https://recruitment.bank.sbi/crpd-sco-2024-25-09/apply தெரிந்து கொள்ளலாம்.
No comments:
Post a Comment