பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் 18-07-2024 - துளிர்கல்வி

Latest

Search This Site

Wednesday, July 17, 2024

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் 18-07-2024

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 18.07.2024 

நெல்சன் மண்டேலா 

திருக்குறள்: 

பால் :பொருட்பால் அதிகாரம்:அறிவுஉடைமை குறள் எண்:421 அறிவற்றம் காக்கும் கருவி செறுவார்க்கும் உள்ளழிக்கல் ஆகா அரண். பொருள் :அறிவு, அழிவு வராமல் காக்கும் கருவியாகும்; அன்றியும் பகை கொண்டு எதிர்ப்பவர்க்கும் அழிக்க முடியாத உள்ளரணும் ஆகும். 

பழமொழி : 

Double charge will break even a cannon அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும். 

இரண்டொழுக்க பண்புகள் : 

1.என்னை விட வயதில் மூத்தோரை மரியாதையுடன் நடத்துவேன். என்னால் இயன்ற உதவிகளை அவர்களுக்கு செய்வேன். 

2.என்னை விட இளையோரிடம் அன்பாக நடந்து கொள்வேன். அவர்களுக்கு சிறந்த வழிகாட்டியாக இருப்பேன். 

பொன்மொழி : 

உங்களது எதிர்காலத்தை உடனடியாக மாற்ற முடியாது, ஆனால் உங்களது பழக்கங்களை மாற்றலாம். அந்த பழக்கங்கள் உங்கள் எதிர்காலத்தை மாற்றும். 

பொது அறிவு : 

 1.உலகில் எந்த நாட்டில் அதிக அளவு பெட்ரோலிய இருப்புகள் உள்ளன? விடை: சவூதி அரேபியா 

 2. இசைக் கருவிகளில் ஒன்றான வீணையில், எத்தனை தந்திக் கம்பிகள் உள்ளன? விடை: 7 

English words & meanings : 

Form- வடிவம், Mold-அச்சு வேளாண்மையும் வாழ்வும் : மாப்பிள்ளை சம்பா கருப்பு கவுனி குடவாழை துளசிவாச சீரகச்சம்பா கைவரச்சம்பா வாடன் சம்பா தேங்காய்பூச் சம்பா சம்பா மோசனம் கொட்டாரச் சம்பா ராஜயோகம், கிச்சிலிச் சம்பா, மிளகு சம்பா முதலியவை அவற்றுள் சில 

ஜூலை 18 நெல்சன் மண்டேலா அவர்களின் பிறந்தநாள் 

நெல்சன் மண்டேலா (Nelson Rolihlahla Mandela, 18 சூலை 1918 – 5 திசம்பர் 2013), தென்னாப்பிரிக்காவின் மக்களாட்சி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் குடியரசுத் தலைவர் ஆவார். அதற்கு முன்னர் நிறவெறிக்கு எதிராகப் போராடிய முக்கிய தலைவர்களுள் ஒருவராக இருந்தார். தொடக்கத்தில் அறப்போர் (வன்முறையற்ற) வழியில் நம்பிக்கை கொண்டிருந்த இவர், பிறகு ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸின் இராணுவப் பிரிவுக்கு தலைமை தாங்கினார். இவர்கள் மரபுசாரா கொரில்லாப் போர்முறைத் தாக்குதலை நிறவெறி அரசுக்கு எதிராக நடத்தினர். மண்டேலாவின் 27 ஆண்டு சிறைவாசம், நிறவெறிக் கொடுமையின் பரவலாக அறியப்பட்ட சாட்சியமாக விளங்குகிறது. சிறையின் பெரும்பாலான காலத்தை இவர் ராபன் தீவில் சிறிய சிறை அறையில் கழித்தார். 

1990 இல் அவரது விடுதலைக்கு பிறகு அமைதியான முறையில் புதிய தென்னாப்பிரிக்கக் குடியரசு மலர்ந்தது. மண்டேலா, உலகில் அதிகம் மதிக்கப்படும் தலைவர்களில் ஒருவராக விளங்கினார். மண்டேலா, இனவெறி ஆட்சியில் ஊறிக்கிடந்த தென்னாபிரிக்காவை மக்களாட்சியின் மிளிர்வுக்கு இட்டுச் சென்றவர். அமைதிவழிப் போராளியாக, ஆயுதப் போராட்டத் தலைவனாக, தேசத்துரோகக் குற்றம் சுமத்தப்பட்ட குற்றவாளியாக, 27 ஆண்டுகள் சிறையில் வாடி பின்னர் விடுதலையாகி குடியரசு தலைவரரானார் . 

அமைதிக்கான நோபல் பரிசு இவருக்கு வழங்கப்பட்டது. நெல்சன் மண்டேலா பன்னாட்டு நாள் (Nelson Mandela International Day) என்பது தென்னாபிரிக்கத் தலைவர் நெல்சன் மண்டேலாவின் பிறந்த நாளான ஜூலை 18 ஆம் நாளைக் குறிக்க ஐக்கிய நாடுகள் அறிவித்த சிறப்பு நாளாகும். 

நீதிக்கதை தீர்வு 

ஒருவர் தனக்கு பெரிய பிரச்சனை வந்துவிட்டது அதை எப்படி தான் சமாளிப்பது என்று தனது நண்பரிடம் தினமும் புலம்பிக்கொண்டே இருந்தார். அவரது நண்பரோ தினமும் கேட்டு கேட்டு அலுத்துபோய் ஒரு நாள் அந்த பிரச்சனைக்கு யோசனை ஒன்று கூறுவதாகவும், அதன்படி செயல்படுமாறும் கூறினார். அதுக்கு இவரும் சம்மதித்தார். அவரும் "சிறிய கிண்ணத்தில் தண்ணீர் எடுத்துக்கொண்டு உங்கள் உள்ளங்கையில் வைத்திருங்கள்" என்று கூறியவுடன் மறுநாள் சந்திப்பதாக கூறி விட்டு சென்று விட்டார். இவரும் விறுவிறுவென வீட்டிற்கு சென்றவர், கிண்ணத்தில் தண்ணீரை வைத்துக்கொண்டு இருந்திருப்பார் போல மறுநாள் நண்பரை காண வெகு வேகமாய் வந்தார். நண்பரோ, அவரைப் பார்த்து "என்ன நண்பா, நான் சொன்ன யோசனைப்படி செய்தீர்களா?" என்று கேட்டார். "ஆமாம் நண்பரே! என் கையிலேயே வைத்திருந்ததால் மிகவும் கடினமாக இருந்தது.கை வலித்தது. என்ன யோசனை, மிக மட்டமான யோசனை என்று சலித்துக் கொண்டார். அதைக் கேட்ட நண்பர் சிரித்துக் கொண்டே, "சிறிய கிண்ணத்தில் இருக்கும் தண்ணீர் குறைந்த கனமுடையதாகவே இருக்கும். ஆனால் அதை எவ்வளவு நேரம் கையில் வைத்திருக்கிறோம் என்பதை பொறுத்து அதனுடைய கனம் அமையும். அதுபோலவே வாழ்வில் சிறிதோ, பெரிதோ பிரச்சனைகள் வரும்போது அதையே நினைத்துக் கொண்டிருந்தால் மிகவும் கடினமாக தோன்றும். சற்று தள்ளி வைத்துவிட்டு அந்த பிரச்சனைக்குரிய தீர்வு என்ன என்று யோசிக்க வேண்டும். மேலும் வேறு வேலைகளில் நம்மை ஈடுபடுத்திக் கொண்டால் மனக்கவலைகளில் இருந்தும் வெளிவரலாம்" என்று கூறினார். 

இன்றைய செய்திகள் 18.07.2024 

@ தமிழகம் முழுவதும் நிறுத்தப்பட்ட 800 வழித்தடங்களில் மீண்டும் பேருந்துகள் இயக்கம்: போக்குவரத்து துறை அமைச்சர் தகவல். 
@ உயர்கல்வித் துறை சார்பில் கல்லூரிகளுக்கு ரூ.52.75 கோடியில் கட்டப்பட்ட புதிய கட்டிடங்களை முதல்வர் ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்தார். 
@ தமிழகம் முழுவதும் 65 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: உள்துறை செயலராக தீரஜ்குமார் நியமனம். 
@ 5 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்: வங்க கடலில் மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு. 
 @/தனியார் நிறுவனங்களில் கன்னடர்களுக்கு இடஒதுக்கீடு மசோதா: கர்நாடகா அமைச்சரவை ஒப்புதல். 
 @ ஓமன் கடலில் எண்ணெய் டேங்கர் கவிழ்ந்துள்ளது. அதன் பணியாளர்கள் 16 பேர் மாயமாகி உள்ளனர். இதில் 13 பேர் இந்தியர்கள். அவர்களை தேடும் பணி தீவிரம் @ டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் கோவை கிங்ஸ் அணி, திருச்சியை வீழ்த்தி தொடர்ந்து 4-வது வெற்றியை பதிவு செய்தது. 
 @ பெண்கள் டி20 கிரிக்கெட் தரவரிசை: இந்தியாவின் ஹர்மன்பிரீத், ஷபாலி வர்மா முன்னேற்றம். 
 @ டி20 பேட்ஸ்மேன்கள் தரவரிசை: முதல் இடத்தில் ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட்டும், 2வது இடத்தில் இந்தியாவின் சூர்யகுமார் யாதவ்வும் உள்ளனர். 

 Today's Headlines 

@ Buses will resume operation on 800 routes that were stopped across Tamil Nadu: Transport Minister informs. 
@ Chief Minister Stalin inaugurated the new buildings constructed for colleges at a cost of Rs 52.75 crore on behalf of the higher education department through video. 
@ Transfer of 65 IAS officers across Tamil Nadu: Dheerajkumar appointed as Home Secretary. 
@ 5 districts to receive heavy rain today: Another low pressure area is likely to form over Bay of Bengal. 
@ Reservation for Kannada people in Private Institutions: Karnataka Cabinet approved the bill @ An oil tanker is capsized in the sea of ​​Oman. 16 of its employees are missing. 13 of them are Indians. The task of searching for them is intense 
@ TNPL In cricket, Coimbatore Kings recorded their 4th win in a row by defeating Trichy. @ Women's T20 Cricket Rankings: India's Harmanpreet, Shabali Verma progress. 
 @ T20 batsmen rankings: Australia's Travis Head at No. 1, India's Suryakumar Yadav at No. 2 Prepared by Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment