தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்-2, குரூப்-2ஏ தேர்வுகளுக்கு இணைய வழி விண்ணப்பங்களை சமர்ப்பிக்க ஜூலை 19-ம் தேதி (நேற்று) கடைசி நாள் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இணையவழியில் விண்ணப்ப கட்டணம் செலுத்துவதற்கு முடிவதில்லை என தேர்வர்கள் தெரிவித்ததால், விண்ணப்பிக்க மற்றும் தேர்வு கட்டணம் செலுத்த ஜூலை 20-ம் தேதி (இன்று) வரை கால நீட்டிப்பு வழங்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment