பட்டதாரிகளுக்கு பணிவாய்ப்பு
தேர்வு நடத்தும் நிறுவனம்: வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் (ஐ,பி,பி,எஸ்)
காலி பணி இடங்கள்: 6,128. இதில் தமிழ்நாட்டில் உள்ள வங்கிகளில் மட்டும் 665 பணி இடங்கள் நிரப்பப்பட உள்ளன.
பதவி பெயர்: கிளார்க்
கல்வி தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு
வயது: 21-7-2024 அன்றைய தேதிப்படி குறைந்தபட்ச வயது: 20, அதிகபட்ச வயது: 28. அதாவது விண்ணப்பதாரர்கள் 2-7-1996க்கு முன்போ, 1-7-2004க்கு பின்போ பிறந்தவர்களாக இருக்கக்கூடாது. அரசு விதிமுறைகளின்படி 3 முதல் 15 ஆண்டுகள் வரை வயது தளர்வு உண்டு.
தேர்வு முறை: முதல் நிலைத்தேர்வு, மெயின் தேர்வு
தேர்வு நடைபெறும் இடம் (தமிழ்நாடு): முதல் நிலைத்தேர்வு - சென்னை, கோவை, ஈரோடு, மதுரை, நாகர்கோவில்/கன்னியாகுமரி, நாமக்கல், சேலம், தஞ்சாவூர், திருச்சி, திருநெல்வேலி, வேலூர், விருதுநகர் மற்றும் புதுச்சேரி
மெயின் தேர்வு: சென்னை, மதுரை, சேலம், திருச்சி, திருநெல்வேலி, வேலூர், விருதுநகர் மற்றும் புதுச்சேரி
விண்ணப்பிக்க கடைசி தேதி: 21-7-2024
இணையதள முகவரி: https://www.ibps.in/index.php/clerical-cadre-xiv
No comments:
Post a Comment