இன்ஜினியரிங் முடித்தவர்களுக்கு ரயில்வே பொதுத்துறை நிறுவனத்தில் வேலை! | ரூ.2.4 லட்சம் சம்பளம் | 26.07.2024 தேதி வரை - துளிர்கல்வி

Latest

Search This Site

Friday, July 19, 2024

இன்ஜினியரிங் முடித்தவர்களுக்கு ரயில்வே பொதுத்துறை நிறுவனத்தில் வேலை! | ரூ.2.4 லட்சம் சம்பளம் | 26.07.2024 தேதி வரை

ரூ.2.4 லட்சம் சம்பளம்.. இன்ஜினியரிங் முடித்தவர்களுக்கு ரயில்வே பொதுத்துறை நிறுவனத்தில் வேலை! 
இந்திய ரயில்வே அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பொதுத்துறை நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பொறியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.இந்திய ரயில்வே அமைச்சகத்தின் கீழ் இயங்கும் நவரத்தினா கம்பெனி - ரயில் இந்தியா டெக்னிக்கல் அண்ட் எக்கனாமிக் சர்வீசஸ் லிமிடெட். இந்த பொதுத்துறை நிறுவனத்தில் காலியாக உள்ள திட்ட தலைவர், குழு தலைவர், வடிவமைப்பு நிபுணர், பொறியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வந்துள்ளது. 

இந்த பணிகளுக்கு தேவையான கல்வித் தகுதி, சம்பளம், காலியிட எண்ணிக்கை உள்ளிட்ட முழு விபரங்களையும் இந்த செய்தித் தொகுப்பில் தெரிந்து கொள்ளுங்கள். திட்டத் தலைவர் (சிவில்) காலியிடங்கள்: 01 சம்பளம்: மாதம் ரூ.90,000 முதல் ரூ.2,40,000 வரைகல்வி தகுதி: சிவில் இன்ஜினியரிங் அல்லது அதற்கு சமமான இளங்கலை பட்டம். குழு தலைவர் (சிவில்) காலியிடங்கள்: 04 சம்பளம்: மாதம் ரூ.35,400 முதல் ரூ.1,12,400 வரை கல்வி தகுதி: சிவில் இன்ஜினியரிங் அல்லது அதற்கு சமமான இளங்கலை பட்டம். வடிவமைப்பு நிபுணர் (சிவில்)காலியிடங்கள்: 06 

சம்பளம்: மாதம் ரூ.70,000 முதல் ரூ.2,00,000 வரை 

கல்வி தகுதி: சிவில் என்ஜினீரிங்கில் இளங்கலை பட்டம் அல்லது அதற்கு சமமான மற்றும் கட்டமைப்பு பொறியியலில் முதுகலை பட்டம். ரெசிடண்ட் பொறியாளர் (பாலம்) காலியிடங்கள்: 01 சம்பளம்: மாதம் ரூ.60,000 முதல் ரூ.1,80,000 வரை கல்வி தகுதி: சிவில் இன்ஜினியரிங் இளங்கலை பட்டம்/அதற்கு சமமான டிப்ளமோ. ரெசிடண்ட் பொறியாளர் (தடம்)காலியிடங்கள்: 03 சம்பளம்: மாதம் ரூ.60,000 முதல் ரூ.1,80,000 வரை 

கல்வி தகுதி: சிவில் இன்ஜினியரிங் இளங்கலை பட்டம் அல்லது அதற்கு சமமான படிப்பு / சிவில் இன்ஜினியரிங் அல்லது அதற்கு சமமான டிப்ளமோ.ரெசிடண்ட் பொறியாளர் (சிவில்)காலியிடங்கள்: 04 சம்பளம்: மாதம் ரூ.60,000 முதல் ரூ.1,80,000 வரை 

கல்வி தகுதி: சிவில் இன்ஜினியரிங் இளங்கலை பட்டம் அல்லது அதற்கு சமமான படிப்பு அல்லது சிவில் இன்ஜினியரிங் அல்லது அதற்கு சமமான டிப்ளமோ. ரெசிடண்ட் பொறியாளர் (S&T) காலியிடங்கள்: 03 சம்பளம்: மாதம் ரூ.60,000 முதல் ரூ.1,80,000 வரை 

கல்வி தகுதி: எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் இளங்கலை பட்டம் அல்லது அதற்கு சமமான படிப்பு அல்லது எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் டிப்ளமோ அல்லது அதற்கு சமமான படிப்பு. ரெசிடண்ட் பொறியாளர் (மின்சாரம்) காலியிடங்கள்: 04 சம்பளம்: மாதம் ரூ.60,000 முதல் ரூ.1,80,000 வரை கல்வி தகுதி: மின் பொறியியலில் இளங்கலை பட்டம் அல்லது அதற்கு சமமான படிப்பு அல்லது மின் பொறியியலில் டிப்ளமோ அல்லது அதற்கு சமமான கல்வி. பொறியாளர் (வடிவமைப்பு) காலியிடங்கள்: 01 சம்பளம்: மாதம் ரூ.30,000 முதல் ரூ.1,20,000 வரை கல்வி தகுதி: கட்டமைப்பு பொறியியலில் முதுகலை பட்டம் அல்லது சிவில் இன்ஜினியரிங் இளங்கலை பட்டம் அல்லது அதற்கு சமமான படிப்பு அல்லது சிவில் இன்ஜினியரிங் அல்லது அதற்கு சமமான டிப்ளமோ.  முழு விவரம் இதோ வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 55 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். 

அரசாங்கத்தில் வயது வரம்புத் தளர்வுகள் பொருந்தும். வயது வரம்புத் தளர்வு: பிற்படுத்தப்பட்ட பிரிவினர்- 3 ஆண்டுகள், பட்டியலினம்/ பழங்குடியினர் - 5 ஆண்டுகள், மாற்றுத்திறனாளிகள் - 10 -15 ஆண்டுகள். தேர்வு செய்யும் முறை: இந்த பணிகளுக்கு தகுதியான நபர்கள், தகுதிப் பட்டியல் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். எப்படி விண்ணப்பிப்பது? தகுதியும் ஆர்வமும் உள்ள நபர்கள் 10.07.2024 தேதி முதல் 26.07.2024 தேதி வரை https://www.rites.com/Career என்ற அதிகாரபூர்வ இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு தேவையான கல்விச் சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும்.

No comments:

Post a Comment