‘நான் முதல்வன்' திட்டம் - சிவில் சர்வீசஸ் முதன்மைத்தேர்வுக்கு ரூ,25 ஆயிரம் ஊக்கத்தொகையுடன் பயிற்சி திறன் மேம்பாட்டுக்கழகம் அறிவிப்பு - துளிர்கல்வி

Latest

Search This Site

Saturday, July 20, 2024

‘நான் முதல்வன்' திட்டம் - சிவில் சர்வீசஸ் முதன்மைத்தேர்வுக்கு ரூ,25 ஆயிரம் ஊக்கத்தொகையுடன் பயிற்சி திறன் மேம்பாட்டுக்கழகம் அறிவிப்பு

சிவில் சர்வீசஸ் முதன்மைத்தேர்வுக்கு ரூ,25 ஆயிரம் ஊக்கத் தொகையுடன் பயிற்சி வழங்கப்பட உள்ளது என்றும், இதற்கு வருகிற 28-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் அறிவித்துள்ளது. 

சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு பயிற்சி 

‘நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் போட்டித் தேர்வு பிரிவு செயல்பட்டு வருகிறது. இதில் மத்திய அரசு வேலைவாய்ப்புக்கான போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம், அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரியுடன் இணைந்து சிவில் சர்வீசஸ் தேர்வுகளுக்கான பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. 

 1,000 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு மாதம் ரூ,7,500 வீதம் 10 மாதங்களுக்கு வழங்கப்பட்டு முதல்நிலைத் தேர்வுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது. அதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு முதன்மைத் தேர்வுக்கான பயிற்சியும் அளிக்கப்படுகிறது. அவ்வாறு பயிற்சி பெறுபவர்களுக்கு ரூ,25 ஆயிரம் ஊக்கத்தொகையும் வழங்கப்படும். 

28-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் அந்த வகையில் சமீபத்தில் சிவில் சர்வீசஸ் பதவிகளுக்கான முதல்நிலைத்தேர்வு நடந்து முடிந்து அதற்கான தேர்வு முடிவும் வெளியானது. இந்த தேர்வில் வெற்றி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு முதன்மைத் தேர்வுக்கான பயிற்சி ரூ,25 ஆயிரம் ஊக்கத் தொகையுடன் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் கீழ் இயங்கி வரும் நான் முதல்வன் போட்டித் தேர்வுகள் பிரிவு வாயிலாக மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த பயிற்சியை பெறுவதற்கு முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழ்நாட்டு மாணவர்கள் https://portal.naanmudhalvan.tn.gov.in/upsc-registration என்ற இணையதளத்தில் வருகிற 28-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என நான் முதல்வன் போட்டித் தேர்வுகள் பிரிவு சிறப்புத் திட்ட இயக்குனர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment