கர்நாடகத்தில் அரசு ஊழியர்களுக்கு 58½ சதவீத சம்பள உயர்வு! - துளிர்கல்வி

Latest

Search This Site

Wednesday, July 17, 2024

கர்நாடகத்தில் அரசு ஊழியர்களுக்கு 58½ சதவீத சம்பள உயர்வு!

கர்நாடக சட்டசபையின் மழைக்கால கூட்டத்தொடர் நேற்று முன்தினம் பெங்களூரு விதான சவுதாவில் தொடங்கியது. நேற்று முதல்-மந்திரி சித்தராமையா ஒரு அறிவிப்பை வெளியிட்டு பேசினார். 


அவர் கூறியதாவது:- 

கர்நாடக அரசு ஊழியர்களுக்கு கடந்த 1-ம் தேதி முதல் சம்பள உயர்வை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி அரசு ஊழியர்களின் அடிப்படை ஊதியத்தில் 31 சதவீதம் அகவிலைப்படி மற்றும் 27½ சதவீத சம்பள உயர்வு (பிட்மென்ட்) உயர்த்தப்படுகிறது. இதன் மூலம் அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தில் 58½ சதவீதம் உயருகிறது. அரசு ஊழியர்களின் சம்பள உயர்வால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ,20 ஆயிரத்து 208 கோடி கூடுதல் நிதிச்சுமை ஏற்படும். இவ்வாறு அவர் பேசினார்.

No comments:

Post a Comment