கத்தரிக்காய் ரசம் - துளிர்கல்வி

Latest

Search This Site

Wednesday, July 17, 2024

கத்தரிக்காய் ரசம்

கத்தரிக்காய் ரசம்

தேவையான பொருட்கள்:

கத்தரிக்காய்– 1/4 கிலோஎண்ணெய்- 2 ஸ்பூன்கடுகு- 1 ஸ்பூன்பட்ட மிளகாய்- 2சீரகம்- 1 ஸ்பூன்பெருங்காய தூள்- 1/2 ஸ்பூன்கறிவேப்பிலை- தேவையான அளவுபுளி கரைசல்- 1/2 கப்வெங்காயம்- 1பச்சை மிளகாய்- 2வெல்லம்- 2 ஸ்பூன்கொத்தமல்லி இலை- சிறிதளவு செய்முறை:

முதலில் கத்தரிக்காயின் மேற்பகுதியில் லேசாக எண்ணெய் தடவி கொள்ளுங்கள். அடுத்து, அடுப்பை ஆன் செய்து குறைவான தீயில் வைத்து கத்தரிக்காவை சுட்டு எடுத்து கொள்ளுங்கள்.

பிறகு, சுட்ட கத்தரிக்காவின் மேல் சிறிதளவு தண்ணீர் தெளித்து அதன் தோலினையும் காம்பினையும் நீக்கி விட்டு ஒரு கிண்ணத்தில் எடுத்து கொள்ளுங்கள்.

இப்போது, ஒரு கரண்டியினை பயன்படுத்தி கத்தரிக்காவை மசித்து கொள்ளுங்கள்.

நன்றாக மசித்த பிறகு, அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் கொத்தமல்லி இலைகளை சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.

* பிறகு, இதனுடன் நச்சு எடுத்த வெல்லம் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.* இந்நிலையில், கரைத்து வைத்த புளி கரைசலை சேர்த்து அதனுடன் 1 கப் அளவிற்கு தண்ணீரும் சேர்த்து கையை பயன்படுத்தி நன்றாக கரைத்து விடுங்கள்

இப்போது அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் எண்ணெய் சேர்த்து கொள்ளுங்கள். எண்ணெய் சூடானதும், அதில் கடுகு மற்றும் சீரகம் சேர்த்து பொரிய விடுங்கள். பிறகு இரண்டாக நறுக்கிய பட்ட மிளகாய், பெருங்காய தூள் மற்றும் 2 கொத்து கறிவேப்பிலை சேர்த்து வதக்கி கொள்ளுங்கள்.

இப்போது வதக்கிய பொருட்களை எடுத்து தயார் செய்து வைத்துள்ள கத்தரிக்காய் ரசத்தில் சேர்த்தால் சுவையான ஆந்திரா ஸ்டைல் கத்தரிக்காய் ரசம் தயார்.

No comments:

Post a Comment