‘கியூட்' நுழைவுத்தேர்வு இறுதி விடைக்குறிப்புகள் வெளியீடு - துளிர்கல்வி

Latest

Search This Site

Friday, July 26, 2024

‘கியூட்' நுழைவுத்தேர்வு இறுதி விடைக்குறிப்புகள் வெளியீடு

‘கியூட்' நுழைவுத்தேர்வு இறுதி விடைக்குறிப்புகள் வெளியீடு 
பல்கலைக்கழகங்களில் இளங்கலை படிப்புகளில் சேருவதற்கு தேசிய தேர்வு முகமை பொது பல்கலைக்கழக நுழைவுத்தேர்வு என்று அழைக்கப்படும் ‘கியூட்’ தேர்வை ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வருகிறது. அந்தவகையில் நாடு முழுவதும் 261 மத்திய, மாநில, நிகர்நிலை மற்றும் தனியார் பல்கலைக்கழகங்கள் இந்த தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்த முன்வந்தன. அதன்படி, கியூட் நுழைவுத்தேர்வு 15 பாடங்களுக்கு பேப்பர்-பேனா முறையிலும், 48 பாடங்களுக்கு கணினி வழியிலும் கடந்த மே மாதம் நடத்தி முடிக்கப்பட்டது. 
தேர்வு முடிவு ஜூன் 30-ந்தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நீட், நெட் தேர்வு பிரச்சினைகளால் கியூட் தேர்வு முடிவு வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது. இந்த நிலையில் நீட் தேர்வு இறுதி மதிப்பெண் பட்டியலை வெளியிட சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்த நிலையில், அடுத்தகட்டமாக கியூட் தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கான பணிகளை தேசிய தேர்வு முகமை தொடங்கியுள்ளது. அந்தவகையில் பேனா-பேப்பர் மற்றும் கணினி வாயிலாக நடத்தப்பட்ட கியூட் நுழைவுத் தேர்வுக்கான இறுதி விடைக்குறிப்புகள் https://www.nta.ac.in/ என்ற இணையதளத்தில் நேற்று வெளியிடப்பட்டது. இதனைத்தொடர்ந்து தேர்வு முடிவு விரைவில் வெளியாக வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment