வாழைக்காய் வறுவல் செய்வது எப்படி? - துளிர்கல்வி

Latest

Search This Site

Wednesday, July 17, 2024

வாழைக்காய் வறுவல் செய்வது எப்படி?

வாழைக்காய் வறுவல் செய்வது எப்படி ... 

தேவையான பொருட்கள் 
வாழைக்காய் - 2 பூண்டு - 5 
பல் வரமிளகாய் - 10 
சோள மாவு - 
1 தேக்கரண்டி 
எண்ணெய் - தேவையான அளவு 
உப்பு - தேவையான அளவு 

செய்முறை
 
1.வாழைக்காய் நீள நீளத் துண்டுகளாக விரல் மொத்தத்தில் நறுக்கிக் கொள்ளவும். 
2. நறுக்கிய துண்டுகளை கொதிக்கும் நீரில் போட்டு உடனே எடுக்கவும். 
3. வரமிளகாய், உப்பு, பூண்டு ஆகியவற்றை விழுதாக அரைத்துக் கொள்ளவும். 
4.வெந்நீரில் போட்டு எடுத்த வாழைக்காயுடன் அரைத்த மசாலா விழுது, சோளமாவு ஆகியவற்றைச் சேர்த்து, தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்து பிசறிக் கொள்ளவும். 
5.எண்ணெயைக் காயவைத்து பிசறிவைத்த வாழைக்காயைப் போட்டு பொன்னிறமாக வறுத்தெடுக்கவும்.

No comments:

Post a Comment